For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன நடந்தாலும் மேட்ச் நடத்துவோம்.. யாரும் தடுக்க முடியாது.. கங்குலி அதிரடி முடிவு!

மும்பை : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு மாதங்கள் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது.

இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான சூழல் உள்ளதா? என்ற கேள்வி ஒரு புறம் உள்ளது.

மறுபுறம் இங்கிலாந்து வீரர்கள் இந்தியா வர அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ்

உருமாறிய கொரோனா வைரஸ்

இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இங்கிலாந்தில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து வீரர்கள், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்

கடும் கட்டுப்பாடுகள்

இந்திய அரசு இங்கிலாந்தில் இருந்து மக்கள் வர கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து வரும் விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.

உறுதி

உறுதி

ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி என் தொடரை நடத்துவதில் உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர்கள் பிப்ரவரி - மார்ச் மாதத்தில் தான் நடைபெற உள்ளது. அதற்குள் நிலைமை மாறலாம்.

கங்குலி திட்டம்

கங்குலி திட்டம்

ஒருவேளை மோசமாக மாறினால் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் கங்குலி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடர் அமீரகத்தில் எந்த சிக்கலும் இன்றி நடந்தது. அதே போல, இங்கிலாந்து தொடரையும் நடத்த முடியும் என அவர் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

நடக்குமா?

நடக்குமா?

எனினும், ஐக்கிய அரபு அமீரகமும் இங்கிலாந்து அணி வர தடை விதித்தால் அந்த தொடர் நடப்பது சந்தேகமே. 2021ஆம் ஆண்டிலேயே இந்திய அணி பின் பகுதியில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடர் நடைபெறுவதும் சிக்கலாகவே உள்ளது.

Story first published: Friday, January 1, 2021, 12:14 [IST]
Other articles published on Jan 1, 2021
English summary
Sourav Ganguly hope for England tour of India amid Coronavirus scare
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+