Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டு வாரம் ஹோட்டல்லயே இருந்தா, இந்திய வீரர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாயிடுவாங்க

டெல்லி : வரும் டிசம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா -ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தை குறைக்க வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு வார காலங்களுக்கு ஹோட்டல் அறைகளில் சும்மா இருந்தால் இந்திய வீரர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தி இன்ஸ்பிரேஷன் என்ற நிகழ்ச்சிக்காக பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்த தொடர் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பரில் துவக்கம்

டிசம்பரில் துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வரும் டிசம்பர் மாதத்தில் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கென முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த தொடர் இந்திய அணி வீரர்களுக்கு மிகுந்த ரிலாக்சாக இருக்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

4 டெஸ்ட் போட்டிகள் தொடர்

4 டெஸ்ட் போட்டிகள் தொடர்

கடந்த 4 மாதங்களாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், கடந்த 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் துவங்கியுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு நாட்டு அணியினரும் சில தொடர்களை திட்டமிட்டு வருகின்றனர். இந்தியா, இலங்கை உள்ளிட்ட சுற்றுப்பயணங்களை ரத்து செய்தாலும், ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடவுள்ளது.

குறைக்கப்பட கங்குலி கோரிக்கை

குறைக்கப்பட கங்குலி கோரிக்கை

இந்நிலையில், கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தனிமைப்படுத்தப்படவுள்ள இந்திய வீரர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தை குறைக்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டு வாரங்கள் வெறுமனே ஹோட்டல் அறைகளில் இந்திய வீரர்கள் இருந்தால் அவர்கள் மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாவார்கள் என்றும் கூறியுள்ளார்.

கேரியரை தீர்மானிக்கும் தொடர்

கேரியரை தீர்மானிக்கும் தொடர்

தி இன்ஸ்பிரேஷன் என்ற நிகழ்ச்சிக்காக பேசிய சவுரவ் கங்குலி, இந்த தொடர் கேப்டன் விராட் கோலிக்கு அவரது கேரியரை தீர்மானிக்கும் தொடராக அமையும் என்றும் கூறியுள்ளார். டிசம்பர் மாதம் வரையில் தன்னுடைய பதவிக்காலம் தொடருமா என்று தனக்கு தெரியாது என்றும் ஆனால் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பான வகையில் தொடர இந்த தொடர் காரணமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோலி உறுதி படுத்த வேண்டும்

கோலி உறுதி படுத்த வேண்டும்

6 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளை விளையாடாமல் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தன்னையும் இந்திய அணி வீரர்கள் குறிப்பாக பௌலர்கள் ஷமி, பும்ரா, இஷாந்த், பாண்டியா போன்றவர்களின் பிட்னசையும் உறுதி செய்ய விராட் கோலிக்கு அறிவுறுத்தியுள்ளதாக கங்குலி குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு சிறப்பாக தயாராவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, July 12, 2020, 12:12 [IST]
Other articles published on Jul 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+