மருத்துவமனையில் கங்குலி.. எப்படி இருக்கிறார்? ஜெய் ஷா முக்கிய தகவல்!
கொல்கத்தா : பிசிசிஐ தலைவர் கங்குலி நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் என்ன நிலையில் இருக்கிறார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கங்குலியின் குடும்பத்தினரிடம் கேட்டு அறிந்தார்.
அந்த தகவலை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கங்குலி தற்போது நிலையாக இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

நெஞ்சு வலி
கங்குலி இன்று காலை உடற்பயிற்சி செய்த போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் வுட்லாண்ட்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கே அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

பரபரப்பு
இதை அடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது, இந்த தகவல் வெளியான நிலையில், கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கங்குலியின் நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜெய் ஷா பதிவு
ஜெய் ஷா பதிவில் கங்குலி விரைவில் மீண்டு வர வேண்டிக் கொள்வதாகவும், அவர் குடும்பத்தினரிடம் தான் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கங்குலி நிலையாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் உடல்நிலை ஒத்துழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்போது வீடு திரும்புவார்?
கங்குலி ஆஞ்சியோபிளாஸ்டி முடிந்து இன்று இரவே வீட்டுக்கு திரும்பி விடுவார் என கூறப்படுகிறது. அவருக்கு லேசான அளவில் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. விராட் கோலி, சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications