For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரண்டு சிறந்த முன்னாள் கேப்டன்களை வளைத்துப் போட்ட டெல்லி கேபிடல்ஸ்! ஆலோசகர் பதவியில் கங்குலி!!

டெல்லி : ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணியில் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி டேர்டெவில்ஸ் என கடந்த ஆண்டு வரை அழைக்கப்பட்டு வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி, பெயரை மாற்றினால் தலையெழுத்து மாறி விடும் என நம்பி ஐபிஎல் 2019 தொடரை எதிர்கொண்டுள்ளது.

"அவருக்கு" மட்டும் நிறைய வாய்ப்பு.. ஆனா அம்பதி ராயுடுவுக்கு கிடையாதா? இது அநியாயம்! எகிறும் கம்பீர்

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

அதன் முதல் கட்டமாக ஷிகர் தவானை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து வாங்கியது டெல்லி கேபிடல்ஸ். அடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளர் பதவியில் நீட்டித்தது.

சௌரவ் கங்குலி

சௌரவ் கங்குலி

அதை தொடர்ந்து, சௌரவ் கங்குலியை ஆலோசகராக நியமித்துள்ளது டெல்லி அணி. இதன் மூலம், சம காலத்தில் கிரிக்கெட் உலகில் கோலோச்சி வந்த இரு சிறந்த கேப்டன்களை ஒரே அணியில் இணைத்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்

ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். இவரது தலைமையில் டெல்லி அணியை கோப்பை வெல்ல வைக்க வேண்டியது இவர்கள் இருவருடைய பொறுப்பாக மாறியுள்ளது.

பொறுப்பு

பொறுப்பு

டெல்லி அணி ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வென்றதில்லை. கோப்பை வெல்லாவிட்டாலும் லீக் போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. அதை மாற்ற வேண்டிய பொறுப்பு பாண்டிங் - கங்குலி கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

90’ஸ் கிட்ஸ் நிலை என்ன?

90’ஸ் கிட்ஸ் நிலை என்ன?

சரி, இதெல்லாம் இருக்கட்டும். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கங்குலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது. அப்போது, ரிக்கி பாண்டிங்கை வில்லனாக பார்த்த 90'ஸ் கிட்ஸ், டெல்லி அணியில் பாண்டிங் - கங்குலி இருவரும் சேர்ந்து செயல்படுவதை ஏற்றுக் கொள்வார்களா?

Story first published: Thursday, March 14, 2019, 17:46 [IST]
Other articles published on Mar 14, 2019
English summary
Sourav Ganguly joins Delhi Capital in IPL 2019 as advisor
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X