Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை அரையிறுதி: இந்த 5 அணிகளை பார்த்து வச்சுக்கோங்க.. பிறந்தநாளன்று கணிப்பை வெளியிட்ட கங்குலி

கொல்கத்தா: உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு செல்ல 5 அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 4வது முறையாக இந்தியாவில் நடத்தப்படவுள்ளது. இதற்காக 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு மைதானங்கள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் ஐசிசி உலகக்கோப்பைக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அகமதாபாத் மைதானத்திற்கு பின் கொல்கத்தா மைதானத்தில் தான் முக்கியப் போட்டிகள் நடக்கவுள்ளன.

Sourav Ganguly picks the Four Semi finalist of the World Cup 2023

மொத்தமாக 5 உலகக்கோப்பை போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோதும் சூழல் ஏற்பட்டால், அந்தப் போட்டியும் கொல்கத்தா மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அதிகளவிலான ரசிகர்கள் அமரும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளதே காரணமாக பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அமர்ந்து போட்டியை கண்டு ரசிக்க முடியும். இந்த நிலையில் இன்று 51வது பிறந்தநாளை கொண்டாடும் சவுரவ் கங்குலி உலகக்கோப்பை குறித்த எதிர்பார்ப்புகள் பற்றி கூறியுள்ளார். அதில், ஐசிசி தொடர்களில் இந்திய அணி எப்போதும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. ஆனால் இம்முறை பாகிஸ்தான் சிறந்த அணியாக இருக்கிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எந்த அறிவுரையும் தேவையில்லை. ஏனென்றால் அவர் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார். அது அவ்வளவு சாதாரணம் கிடையாது. அதனால் நிச்சயம் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று நம்பலாம். அதேபோல் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணிப்பது எளிதல்ல. எனது கணிப்பின் படி இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.

அதேபோல் ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணியை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. இம்முறை 5 அணிகள் பலமான அணிகளாக உள்ளன. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கும் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வர வேண்டும். அப்போது தான் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி ஆட்டத்தை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, July 8, 2023, 11:17 [IST]
Other articles published on Jul 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+