Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி!

Recommended Video

Ganguly points out kohli mistakes

மும்பை : இந்திய அணியின் செயல்பாடு பற்றி புதிய பிசிசிஐ தலைவர் ஆகப் போகும் கங்குலியிடம் கேட்ட போது, கேப்டன் கோலியின் குறிப்பிட்ட தோல்வியை மறைமுகமாக சுட்டிக் காட்டி, அவர் அதை சரி செய்வார் என நம்புவதாக கூறினார்.

பிசிசிஐயின் புதிய தலைவராக முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொறுப்பு

பொறுப்பு

அதிலும் கங்குலி போட்டியின்றி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். நிர்வாக ரீதியாக பிசிசிஐ அமைப்பையும், இந்திய உள்ளூர் கிரிக்கெட் அமைப்புகளையும் வரைமுறைப்படுத்த வேண்டிய முக்கியமான பொறுப்பு கங்குலிக்கு உள்ளது.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

இந்திய அணியைப் பொறுத்தவரை பிசிசிஐ-யில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த நிர்வாக சிக்கல்களை மீறி சிறப்பான அணி மற்றும் வீரர்கள் அமைந்துள்ளனர். இந்திய அணியும் வெற்றிகளை குவித்து வருகிறது.

உலகக்கோப்பை தோல்வி

உலகக்கோப்பை தோல்வி

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

பெரிய குறைகள் இல்லை

பெரிய குறைகள் இல்லை

அதைத் தவிர இந்திய அணி வெற்றிகளை குவிப்பதில் பெரிய குறைகள் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து பிசிசிஐ தலைவர் ஆகப் போகும் கங்குலியிடம் கேட்கப்பட்டது.

ஒரே ஒரு குறை

ஒரே ஒரு குறை

அதற்கு பதில் அளித்த கங்குலி, "இந்தியா நல்ல அணி. கடந்த ஏழு பெரிய தொடர்களை நாம் வெல்லவில்லை என்ற ஒரே ஒரு குறையை மட்டும் தான் கேப்டன் கோலி போக்க வேண்டும்" என்றார்.

சாம்பியன் வீரர்

சாம்பியன் வீரர்

மேலும், "ஆனால், அவர்கள் பெரிய தொடர்களில் அரையிறுதி, இறுதிப் போட்டிகளை தவிர சிறப்பாக ஆடுகிறார்கள். விராட் கோலி அதை மாற்றுவார் என நம்புகிறேன். அவர் ஒரு சாம்பியன் வீரர்" என்றார் கங்குலி.

ஐசிசி தொடர்களில் இந்தியா

ஐசிசி தொடர்களில் இந்தியா

கங்குலி சொல்லும் பெரிய தொடர்கள் ஐசிசி தொடர்கள் தான். தோனி காலத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வென்றது தான் இந்திய அணி கடைசியாக வென்ற ஐசிசி தொடர்.

ஏழு தொடர்கள்

ஏழு தொடர்கள்

அதன் பின் நடந்த டி20 உலகக்கோப்பைகள், 2015 மற்றும் 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் என ஏழு தொடர்களில் இந்திய அணி வெற்றி பெறவில்லை.

கேப்டன் மீது விமர்சனம்

கேப்டன் மீது விமர்சனம்

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய போது பலரும் கேப்டன் கோலியை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

மறைமுக அழுத்தம்

மறைமுக அழுத்தம்

தற்போது பிசிசிஐ தலைவர் ஆகப் போகும் கங்குலியும் ஐசிசி தொடரில் வென்று காட்ட வேண்டும் என்ற மறைமுக அழுத்தத்தை கேப்டன் கோலிக்கு கொடுத்துள்ளார். வென்று காட்டுவாரா கேப்டன் கோலி?

Story first published: Wednesday, October 16, 2019, 16:26 [IST]
Other articles published on Oct 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+