Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாய் சுதர்சன் அல்ல.. இந்தியாவின் அடுத்த புஜாரா இவர் தான்.. நம்பர் 3வது இடத்தை குறிவைங்க- கங்குலி

கொல்கத்தா: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்கள் தற்போது இங்கிலாந்து தொடர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.ஆனால் இந்திய அணியின் நம்பர் மூன்றாவது இடத்தில் புஜாராவுக்கு மாற்றுவீரரை இன்னும் இந்திய அணி கண்டுபிடிக்கவில்லை.

நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் கூட கருண் நாயர், சாய் சுதர்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் யாரும் புஜாராவின் நம்பிக்கையை ரசிகர்களுக்கு இதுவரை தரவில்லை. இந்த தருணத்தில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அபிமன்யு ஈஸ்வரனுக்கு ஒரு முறை கூட அந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Abhimanyu Easwaran

இது குறித்து அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை தமது மகன் ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்தால் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று வேதனையுடன் கூடியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி, அபிமன்யு ஈஸ்வரனுக்கு இன்னும் வயது இருக்கின்றது.

அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. ஜெய்ஸ்வால், ராகுல்,பந்த், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். தற்போது மூன்றாவது இடத்தில் மட்டும் தான் இந்திய அணி யாரை பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கின்றது. இதனால் அபிமன்யு ஈஸ்வரனை அந்த இடத்தில் சோதித்துப் பார்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று முன்னாள் வீரர் அருண் லால் பேசும் போது, அபிமன்யூ ஈஸ்வரன் அணிக்கான வீரர் நல்ல ஃபீடரும் கூட தன்னுடைய உடல் தகுதியை எப்போதுமே சிறப்பாக வைத்திருப்பார். ஒரு போட்டிக்கு அவர் தயாராகும் விதம் அபாரமாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார். இதனிடையே, அபிமன்யு ஈஸ்வரனுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்குவேன் என்று பயிற்சியாளர் கம்பீர் உறுதியளித்திருப்பதாக அவருடைய தந்தை கூறி இருப்பது ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கின்றது.

Story first published: Tuesday, August 12, 2025, 15:29 [IST]
Other articles published on Aug 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+