For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாஸ்திரி கோபம் நியாயமே.. சொல்கிறார் பேடி; ஆனால் கும்ப்ளே தேர்வு சரி என்கிறார் மஞ்ச்ரேகர்

டெல்லி: ரவி சாஸ்திரி - சவுரவ் கங்குலி இடையிலான வாய்ச் சண்டை பெரிதாகி வரும் நிலையில் அதுகுறித்து இரு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துிள்ளனர்.

ஒருவர் பிஷன் சிங் பேடி. இன்னொருவர் சஞ்சய் சிங் பேடி. இவர்களின் விசேஷம் என்னவென்றால் கிரிக்கெட் வாரியத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வறுத்து எடுப்பவர் பேடி. மஞ்ச்ரேகரோ, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாழ்த்தி வணங்கி வளம் பெறுபவர்.

Sourav Ganguly-Ravi Shastri feud: This is what former cricketers had to say

இப்படிப்பட்ட இருவரும் தற்போது சாஸ்திரி - கங்குலி தகராறில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மஞ்ச்ரேகர் கூறுகையில், கங்குலியை விட ரவி சாஸ்திரிதான் தன்னை நிராகரித்ததால் பெரும் கோபத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார். இது அவருக்கு புதிய அனுபவம். இருப்பினும் பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ சிறந்த தேர்வையே நிகழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

பேடி வெளியிட்டுள்ள கருத்தில், தனக்குப் பதவி கிடைக்காததை விட தேர்வு நடந்த முறைதான் சாஸ்திரியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அது நியாயமானதும் கூட. ஒருவர் மட்டும் வித்தியாசமாக செயல்பட்டுள்ளதாக சாஸ்திரி கூறியுள்ளார். இதைக் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பேடி.

இன்னும் கவாஸ்கர், கபில்தேவ் என பலரும் கருத்து தெரிவிக்கவுள்ளனர்.. காத்திருப்போம்!

Story first published: Thursday, June 30, 2016, 10:51 [IST]
Other articles published on Jun 30, 2016
English summary
Former India international Sanjay Manjrekar and skipper Bishan Singh Bedi shared contrasting views on the raging verbal battle between former captains Ravi Shastri and Sourav Ganguly in the wake of the national coach apppointment.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X