Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலியின் 4 நாடுகள் போட்டித்தொடர் - புதுமையான யோசனை... கிரிக்கெட் ஆஸ்திரேலியா புகழாரம்

சிட்னி : 4 நாடுகள் பங்குபெறும் சூப்பர் ஒருநாள் போட்டித் தொடர் குறித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் யோசனை மிகவும் புதுமையானது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் ஒருநாள் தொடரை நடத்தும் ஐடியாவை சமீபத்தில் கங்குலி வெளியிட்டார். இதுகுறித்து ஆலோசிக்க தயாராக உள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கங்குலியின் இந்த ஐடியா மிகவும் புதுமையானது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிஇஓ பாராட்டியுள்ளார். பிசிசிஐ தலைவராக பங்கேற்ற குறுகிய காலத்திலேயே கங்குலி புதுமையான பெரிய முடிவுகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக நடந்த பகலிரவு போட்டி

வெற்றிகரமாக நடந்த பகலிரவு போட்டி

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தலைவராக பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே இந்தியா -வங்கதேசத்திற்கு இடையிலான முதல் பகலிரவு போட்டியை பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ளார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி ரசிகர்களின் வரவேற்பை அதிகளவில் பெற்றது.

சவுரவ் கங்குலி யோசனை

சவுரவ் கங்குலி யோசனை

இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் ஒருநாள் தொடர் குறித்த தனது யோசனையை கங்குலி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

தோல்வி யோசனை என கருத்து

தோல்வி யோசனை என கருத்து

கங்குலியின் இந்த யோசனை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்திப், இது ஒரு தோல்வியடையும் ஐடியா என்று தெரிவித்திருந்தார். இந்த தொடர்மூலம் உலக அளவில் மற்ற நாடுகள் தனிமைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆலோசிக்க தயார் என கருத்து

ஆலோசிக்க தயார் என கருத்து

சவுரவ் கங்குலியின் இந்த 4 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் ஒருநாள் தொடர் குறித்து ஆலோசிக்க தயாராக உள்ளதாகவும், இது மிகச்சிறந்த யோசனை எனவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா வரவேற்பு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா வரவேற்பு

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் இந்த ஐடியா புதுமையானது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

சவுரவிற்கு சிஏ சிஇஓ பாராட்டு

சவுரவிற்கு சிஏ சிஇஓ பாராட்டு

பிசிசிஐ தலைவராக தான் பங்கேற்ற குறுகிய காலத்திலேயே சிறப்பான யோசனைகளை சவுரவ் கங்குலி அளித்து வருவதாகவும் அதற்கு இந்த 4 நாடுகள் கிரிக்கெட் போட்டித் தொடர் மிகச்சிறந்த உதாரணம் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிஇஓ ராபர்ட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, December 27, 2019, 17:02 [IST]
Other articles published on Dec 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+