Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாய்ப்பு கிடைக்குறதே பெருசு.. ரெஸ்ட் எடுத்துட்டு வந்து பேசாம விளையாடுங்க.. கங்குலி செம அட்வைஸ்!!

Recommended Video

Ganguly advices BCCI on rest | வீரர்கள் ஓய்வை பற்றி கங்குலி ஆலோசனை

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் பணிச்சுமை குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

உலகக்கோப்பை தொடர் அடுத்து நடைபெற உள்ளதால், இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரின் போது, போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், கங்குலி "பேசாம விளையாடுங்க" என்கிறார்.

சோர்வு ஏற்படுமா?

சோர்வு ஏற்படுமா?

ஐபிஎல் தொடர் மார்ச் 23 முதல் மே இரண்டாம் வாரம் வரை நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடர் மே இறுதியில் துவங்கி ஜூலை வரை நடைபெற உள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடும் வீரர்கள் உலகக்கோப்பையில் சோர்ந்து விடுவார்கள் என்ற பேச்சு உள்ளது. பிசிசிஐ இது குறித்து அறிவுறுத்தல் வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

பேசாம விளையாடுங்க

பேசாம விளையாடுங்க

கங்குலி தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் நிலையில், இது குறித்து பேசினார். "ஆமாம், இது அதிக கிரிக்கெட் தான். ஆனால், விளையாடுங்க. நீங்கள் எப்போதுமே விளையாடிக் கொண்டே இருக்கப் போவது இல்லை" என்றார் அவர்.

வாய்ப்பு

வாய்ப்பு

மேலும், கங்குலி பேசுகையில், கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு சில காலத்துக்குத் தான் கிடைக்கும். எனவே, சர்வதேச அளவிலும், ஐபிஎல்-இலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். எப்படியாவது ஓய்வு எடுத்துக் கொண்டு வந்து புத்துணர்ச்சியுடன் ஆட வேண்டியது தான் என கூறியுள்ளார்.

கங்குலி சொல்வது சரியா?

கங்குலி சொல்வது சரியா?

சோர்வு, பணிச்சுமை போன்ற வார்த்தைகள் எல்லாம் 7-8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததே இல்லை. ஆனால், அப்போதும் சில ஆண்டுகளில் பல சர்வதேச அணிகள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடியுள்ளன. கங்குலி சொல்வது போல, தற்போதைய காலத்தில் வாய்ப்பு கிடைப்பது கடினம். உடல்நிலை சரியாக இருக்கும் பட்சத்தில் வீரர்கள் கிரிக்கெட் ஆடுவதில் தவறில்லை. அதனால், கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு வீரர்கள் ஆடவேண்டியது தான். மேலும், ஓய்வு தேவையா என்பதை வீரர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பிசிசிஐ நிலை

பிசிசிஐ நிலை

அனைத்து ஐபிஎல் அணிகளுமே கங்குலியின் முடிவில் தான் உள்ளன. வீரர்களை கோடிக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிவிட்டு, அவர்களை பயன்படுத்தக் கூடாது என பிசிசிஐ கூற முடியாது என்பதே தற்போதைய நிலை.

Story first published: Wednesday, March 20, 2019, 16:54 [IST]
Other articles published on Mar 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+