Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்.. 2 பேருமே வேர்ல்டு கப் ஆட மாட்டாங்க! குண்டை தூக்கிப் போட்ட கங்குலி

மும்பை: இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இடையே உலகக்கோப்பை அணிக்கு தேர்வாகப் போவது யார் என்ற போட்டி உள்ளது.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டிற்கு தான் ஆதரவு என கூறிய கங்குலி, இருவருமே உலகக்கோப்பை ஆட மாட்டார்கள் எனக் கூறி அதற்கான காரணத்தை கூறினார்.

கேமியோ ஆட்டங்கள்

கேமியோ ஆட்டங்கள்

கங்குலி முதலில் தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட் தான் அணிக்கு தேவை என்பது குறித்து பேசினார். "தினேஷ் கார்த்திக் நிறைய கடைசி நேர கேமியோ ஆட்டங்கள் ஆடி இருக்கிறார். ஆனால், கேதார் ஜாதவ் போல நீண்ட இன்னிங்க்ஸ் ஆடியதில்லை. எனவே, ரிஷப் பண்ட் எதிர்கால வீரர் என்ற அடிப்படையில் அவரை தான் தேர்வு செய்வேன்" என்றார்.

வாய்ப்பு கிடைக்காது

வாய்ப்பு கிடைக்காது

அடுத்து பெரிய குண்டை தூக்கி வீசினார். தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவருமே உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது எனக் கூறினார் கங்குலி.

காரணம் யார்?

காரணம் யார்?

அதற்கு காரணம் விஜய் ஷங்கர் தான் எனவும் கூறினார். விஜய் ஷங்கருக்கு நியூசிலாந்து தொடர் முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றார்.

இடம் இருக்காது

இடம் இருக்காது

எனவே, விஜய் ஷங்கரை தேர்வு செய்யும் பட்சத்தில் இரண்டு மாற்று விக்கெட் கீப்பர்கள் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரும் அணியில் தேர்வு செய்யப்படாமல் போக வாய்ப்புள்ளது. அப்படி என்றால், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் யார்?

கூடுதல் விக்கெட் கீப்பர் யார்?

கூடுதல் விக்கெட் கீப்பர் யார்?

மாற்று துவக்க வீரராக அணியில் வலம் வரும் கே எல் ராகுல்,விக்கெட் கீப்பிங்கும் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை அணியில் எடுத்தால், கூடுதல் விக்கெட் கீப்பர் பிரச்சனையும் தீர்ந்து விடும்.

சரி தான்!

சரி தான்!

இது குறித்து பேசிய கங்குலி, "விஜய் ஷங்கர் தேர்வானால், தினேஷ், ரிஷப் அல்லது ராகுல் மூவரில் ஒருவர் தான் அணியில் இடம் பிடிப்பார்கள் என்றார். கங்குலி சொல்வதும் சரி தான். இந்திய அணி 15 வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும். கூடுதல் பந்துவீச்சாளர்கள் தவிர 1-2 இடம் தான் பேட்ஸ்மேன்களுக்கு இருக்கும். எனவே, உலகக்கோப்பை அணியில் தினேஷ் - ரிஷப் இடம் பெறுவதும் சந்தேகமே!

Story first published: Saturday, March 16, 2019, 13:38 [IST]
Other articles published on Mar 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+