For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நள்ளிரவில்.. நெருங்கிய நண்பருக்கு மெசேஜ் அனுப்பிய கங்குலி.. இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு.. பின்னணி

கொல்கத்தா; பிசிசிஐ அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று தனது நண்பர் ஒருவருக்கு அவர் அனுப்பிய மெசேஜ் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

பிசிசிஐ அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலிக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென இவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை இவருக்கு அளிக்கப்பட்டது.

ஆஞ்சியோபிளாஸ்டி

ஆஞ்சியோபிளாஸ்டி

அவசர அவசரமாக இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயத்தில் உள்ள குழாய்களில் மூன்று இடங்களில் இவருக்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை நீக்குவதற்காக தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

நன்றாக இருக்கிறார்

நன்றாக இருக்கிறார்

சிகிச்சைக்கு பின் கங்குலி நல்ல உடல்நிலையில் இருக்கிறார். இவருக்கு இன்னும் ஒருமுறை ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதயத்தில் மேலும் ஒரு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

நினைவு

நினைவு

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி நேற்று இரவு சுயநினைவிற்கு திரும்பினார். அதன்பின் தனக்கு நெருக்கமான சிலருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். பிசிசிஐ நிர்வாகிகள் ஜெய் ஷா ஆகியோருக்கும் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

 நண்பர்

நண்பர்

இவரின் நெறுங்கிய நண்பர் ஒருவருக்கு கங்குலி அனுப்பிய மெசேஜில்.. நான் நன்றாக இருக்கிறேன் , கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். நேற்று இரவு 11 மணிக்கு மேல் இந்த மெசேஜை அவர் அனுப்பி உள்ளார். கங்குலி உடல்நிலை குறித்து கவலைப்பட்டு வந்த பலருக்கும் இந்த செய்தி பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது.

Story first published: Sunday, January 3, 2021, 11:33 [IST]
Other articles published on Jan 3, 2021
English summary
Sourav Ganguly sent a message saying he is fine after the angiography treatment.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+