Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது யாருன்னு தெரியுதா? முதல் போட்டியிலேயே செஞ்சுரி அடித்து கெத்து காட்டிய நம்ம கேப்டன்!

கொல்கத்தா : பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி தன் டெஸ்ட் அறிமுகத்துக்கு முந்தைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

கங்குலி பகிர்ந்த அந்த புகைப்படம்... யாருனு தெரியுதா?

1996இல் சௌரவ் கங்குலி இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார். தன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசி அசர வைத்தார்.

தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில், கங்குலி பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

நீண்ட நெடிய பயணம்

நீண்ட நெடிய பயணம்

கங்குலி என்றால் நம் அனைவருக்கும் அவர் 2000மாவது ஆண்டு முதல் கேப்டனாக இருந்தது தான் நினைவுக்கு வரும். ஆனால், கிட்டத்தட்ட சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் பயணத்தை ஒட்டிய நீண்ட நெடிய கிரிக்கெட் பயணம் அவருடையது.

டெஸ்ட் அணி அறிமுகம்

டெஸ்ட் அணி அறிமுகம்

சௌரவ் கங்குலி 1992இல் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார். அதன் பின் நான்கு ஆண்டுகள் கழித்து தான் டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார். அவரது முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிரானது. அதுவும் இங்கிலாந்தில் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது அந்தப் போட்டி.

போட்டிக்கு முன் பயிற்சி

போட்டிக்கு முன் பயிற்சி

அந்தப் போட்டிக்கு முன் இளம் வீரராக அவர் பயிற்சி செய்யும் புகைப்படத்தை தான் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் அவர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பந்து வீச தயாராக நிற்பது போன்ற புகைப்படம் அது.

பேட்டிங்கில் சூப்பர்

பேட்டிங்கில் சூப்பர்

அந்தப் போட்டியில் பந்துவீச்சில் கங்குலி சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அதை விட பேட்டிங்கில் தான் அணிக்கு கை கொடுத்தார். தன் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். அதுவும் பல பெரிய பேட்ஸ்மேன்களும் சதம் அடிக்க கனவு காணும் லார்ட்ஸ் மைதானத்தில் அடித்தார்.

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து ரன் குவிப்பு

அது அந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 344 ரன்கள் குவித்தது. தோர்ப் 89, ரஸ்ஸல் 124 ரன்கள் குவித்து இருந்தனர். இங்கிலாந்து அணி மிகவும் நிதான ஆட்டம் ஆடி இருந்தது. கங்குலி பந்துவீச்சில் 15 ஓவர்கள் வீசி 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

கங்குலி சதம்

கங்குலி சதம்

இங்கிலாந்து அணி 130.3 ஓவர்களில் தான் 344 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு கங்குலி, டிராவிட் கை கொடுத்தனர். கங்குலி 301 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தார். 20 ஃபோர் அடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டிராவிட் அபாரம்

டிராவிட் அபாரம்

பின் வரிசையில் ஏழாவது பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய ராகுல் டிராவிட் 267 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். அவருக்கும் இது தான் அறிமுக டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா 429 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை விட 85 ரன்கள் அதிகம் எடுத்து முன்னிலை பெற்றது.

டெஸ்ட் போட்டிகள் செயல்பாடு

டெஸ்ட் போட்டிகள் செயல்பாடு

பின்னர் இங்கிலாந்து 278 ரன்கள் எடுக்க போட்டி டிரா ஆனது. இரண்டாவது இன்னிங்க்ஸில் கங்குலி 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். கங்குலி மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். அவற்றில் 7212 ரன்கள் எடுத்துள்ளார். 16 சதம், 35 அரைசதம் அடித்துள்ளார்.

Story first published: Thursday, May 7, 2020, 17:56 [IST]
Other articles published on May 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+