நல்லா பளபளன்னு சூப்பரா இருக்கு.. அருமையா விளையாடலாம்..ம்ம்.. பார்க்கத்தான் ஆளில்லை!
கொல்கத்தா : பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கத்தின் பணிகள் நிறைவுற்றுள்ளன.
Recommended Video
இந்த கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கத்தை நேரில் பார்வையிட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அதன் புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


முன்னதாக இந்த உள் விளையாட்டு அரங்கத்தின் பணிகள் நிறைவுற்று மார்ச் மாதத்தில் பயன்பாட்டிற்கு தயாராகும் என்று பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்திருந்தார்.

மேற்கு வங்கத்தில் பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கத்தின் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. மிகவும் பிரம்மாண்டமாக இந்த உள் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் மாதத்திற்குள் இந்த அரங்கத்தின் பணிகள் நிறைவுறும் என்று பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்திருந்த நிலையில், இந்த மாதத்தின் மத்தியிலேயே பணிகள் நிறைவுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, முன்னாள் பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக இருந்த தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்த அரங்கத்தின் பணிகளை பார்வையிட்டார். மேலும் அதன் புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார். கிரிக்கெட் அரங்கத்தின் பிரமாண்டத்தை அந்த புகைப்படங்கள் அறுதியிட்டு கூறுகின்றன.

இதையடுத்து தொடர்ந்து மேலும் சில புகைப்படங்களையும் பிசிசிஐ தலைவர் கங்குலி டிவிட்டரில் பதிவிட்டார். அந்த புகைப்படங்களில், வீரர்கள் பயிற்சி செய்யும் இடங்கள், நீச்சல் குளம் மற்றும் உலக தரத்திலான ஜிம் போன்றவற்றை காண முடிந்தது. இந்த உள் விளையாட்டு அரங்கம் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளதற்கு கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த உள்விளையாட்டு அரங்கம் சர்வதேச அளவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் டிவிட்டர் மூலம் பாராட்டுக்களை பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications