Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிறந்தநாளன்று நெஞ்சுவலி குறித்த பேச்சு.. செய்தியாளருக்கு சுவாரஸ்ய பதிலளித்த கங்குலி.. வைரல் வீடியோ!

கொல்கத்தா: சவுரவ் கங்குலி தனது பிறந்தநாளை மிகவும் எளிமையாக வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Sourav Ganguly turns 49, Wishes pour in | Happy Birthday Sourav Ganguly | OneIndia Tamil

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இவருக்காக இணையம் வாயிலாக பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

எளிமையான கொண்டாட்டம்

எளிமையான கொண்டாட்டம்

இந்தியா முழுவதும் கங்குலியின் பிறந்தநாள் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கங்குலி தனது வீட்டில் மிகவும் எளிமையாக கொண்டாடினார். கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற அவர், அங்கு தனது குடும்பத்தினர் மத்தியில் கேக் வெட்டினார். இதுகுறித்த வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

கங்குலி வருத்தம்

கங்குலி வருத்தம்

இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். மேலும் உலகக்கோப்பை டி20 தொடரை இந்தியாவில் நடத்தமுடியாததற்கும் வருத்தம் தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக செல்லும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கூறிய அவர், நிறைய பதக்கங்களை வென்று வருவார்கள் என்றும் கூறினார்.

கங்குலி உடல்நிலை

கங்குலி உடல்நிலை

சவுரவ் கங்குலிக்கு இந்தாண்டின் தொடக்கத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது உடல்நலம் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தற்போது முழு உடல்நிலையுடன் இருக்கிறேன். எப்போதும் உணவுக்கட்டுப்பாடுடன் உள்ளேன். ஆனால் ஸ்பெஷல் தினமான இன்றாவது உணவு கட்டுபாடு இருக்காது என நம்புகிறேன் என வேடிக்கையாக கூறினார்.

பிரபலங்களின் வாழ்த்து

பிரபலங்களின் வாழ்த்து

கங்குலிக்கு இன்று பல்வேறு விவிஎஸ் லட்சுமண், வீரேந்திர சேவாக், முகமது கைஃப், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், கங்குலியின் மாநில மொழியான மராட்டியில் என் அன்பான டாடி, பிறந்தநாள் வாழ்த்துகள், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என கூறியுள்ளார்.

Story first published: Thursday, July 8, 2021, 22:14 [IST]
Other articles published on Jul 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+