Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோட்டை விட்டார் கோஹ்லி.. விட்டு விளாசும் கங்குலி!

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவுகளின் 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையிலும், ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களை வைத்துக்கொண்டும் போட்டியை வெல்வதில் கோஹ்லி கோட்டை விட்டுள்ளார் என்று, முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

4 டெஸ்ட்டுகளில் ஆடுவதற்காக மேற்கு இந்திய தீவுகளுக்கு, இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் சென்றுள்ளது. முதல் டெஸ்டை இந்தியா வென்ற நிலையில், ஜமைக்காவில் 2வது டெஸ்ட் நடந்தது. முதலில் மே.இ.தீவுகள் பேட் செய்தது.

மேற்கு இந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸ்சில் 196 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனது. அஸ்வின் வீழ்த்திய 5 விக்கெட்டுகளும் இதில் முக்கிய பங்கு வகித்தது.

டிராவில் முடிந்த டெஸ்ட்

டிராவில் முடிந்த டெஸ்ட்

2வது இன்னிங்சில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 388 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்ட நேரம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

அபார ரன் குவிப்பு

அபார ரன் குவிப்பு

இந்தியா தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 500 (டிக்ளேர்) செய்தது. கே.எல்.ராகுல் 158, ரஹானே ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் குவித்து இந்த ரன் குவிப்புக்கு உதவினர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

3வது நாள் இறுதி வரை இந்தியாவின் வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருந்தும், போட்டி டிராவில் முடிந்தது வீரர்களுக்கு மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டை விட்ட கோஹ்லி

கோட்டை விட்ட கோஹ்லி

இதுகுறித்து முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளதாவது: மேற்கு இந்திய தீவுகளின் 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையிலும், ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களை வைத்துக்கொண்டும் போட்டியை வெல்வதில் கோஹ்லி கோட்டை விட்டுள்ளார்.

அஸ்வின்தான் டாப்

அஸ்வின்தான் டாப்

இரண்டாவது இன்னிங்சில் அமித் மிஷ்ராவுக்கு பதிலாக, அஸ்வினை முதலிலேயே பவுலிங் செய்ய அழைத்திருக்க வேண்டும். அஸ்வின் முதல் டெஸ்டில் மட்டுமல்லாது, முதல் இன்னிங்சிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

முதலில் பவுலிங்

முதலில் பவுலிங்

அஸ்வின்தான் இந்தியாவின் முக்கிய பவுலர். துருப்பு சீட்டு. காலையில் பிட்ச் கொஞ்சம் ஈரப்பதத்தோடு இருந்தது. அப்போது அஸ்வினை பந்து வீச செய்திருந்தால் விக்கெட்டுகள் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்தது. பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிய பிறகு அஸ்வினை அறிமுகம் செய்தது பலனளிக்கவில்லை.

உமேஷ் யாதவை யூஸ் பண்ணல

உமேஷ் யாதவை யூஸ் பண்ணல

கோஹ்லி, உமேஷ் யாதவை நன்கு பயன்படுத்தியிருக்கலாம். அவர் வெறும் 12 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். உமேஷ் யாதவின் திறமைக்கு இது குறைந்த மதிப்பீடு என்றுதான் பார்க்கிறேன். அதேநேரம் வெளியில் இருந்து கருத்து கூறுவதற்கும் களத்தில் நிற்பதற்குமான வித்தியாசம் கேப்டனுக்குதான் தெரியும் என்பதையும் உணர்ந்துள்ளேன்.

பேட்டிங்கையும் பார்க்கனும்

பேட்டிங்கையும் பார்க்கனும்

அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணி பேட்ஸ்மேன்களின் திறமையையும் பாராட்ட வேண்டும். எனவே இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தனது வீரர்களில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை கிடையாது.

இந்தியாதான் வெல்லும்ங்க

இந்தியாதான் வெல்லும்ங்க

2வது டெஸ்ட்டை டிரா செய்தபோதிலும், மேற்கிந்திய தீவுகள் இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் திறமையுடையது என்று நான் கருதவில்லை. 20 விக்கெட்டுகளை அவர்களால் வீழ்த்த முடியாது என்பதே எனது கணிப்பு. இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

Story first published: Friday, August 5, 2016, 17:33 [IST]
Other articles published on Aug 5, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+