Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி இருக்கீங் கங்குலி... தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி

கொல்கத்தா : மாரடைப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இதயக் குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு அடைப்பில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டது.

கங்குலியின் உடல்நிலை தற்போது தேறியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர அவரது உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை

ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை

பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதயத்தின் 3 குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எந்த உதவியையும் செய்ய தயார்

எந்த உதவியையும் செய்ய தயார்

அவரை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கங்குலியின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும் அவரது மனைவியிடமும் பேசி மோடி, எந்த உதவியையும் செய்ய தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் மேற்பார்வை

தொடர் மேற்பார்வை

கங்குலிக்கு நாடு முழுவதிலும் உள்ள 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நாராயணா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் தேவி ஷெட்டியும் அதில் ஒருவர். இவரது தலைமையின்கீழ் கங்குலிக்கு அடுத்ததாக மற்றொரு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

அடுத்தக்கட்ட நடவடிக்கை

இந்நிலையில் கங்குலியின் அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவெடுக்க அவரது அனைத்து ரிப்போர்ட்டுகளும் மருத்துவ நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களது ஆலோசனையின் பேரில் முடிவெடுக்கப்படும் என்று அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையின் சிஇஓ ருபாலி பாசு தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, January 4, 2021, 14:32 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+