Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு வக்காலத்து வாங்கி பேசிய கங்குலி.. ஆனா கொஞ்சம் கூட ஏத்துக்குற மாதிரி இல்லையே!!

Recommended Video

கேப்டன் கோலிக்கு ஆதரவாக பேசிய கங்குலி- வீடியோ

டெல்லி : ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். தற்போது கங்குலி, கம்பீரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

கௌதம் கம்பீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். வர்ணனை மற்றும் விவாதங்களில் சில வீரர்கள் மீது கடும் விமர்சனம் வைத்து வருகிறார். குறிப்பாக, கோலியின் கேப்டன்சியை ஆஸ்திரேலிய தொடரிலும், தற்போது ஐபிஎல் தொடரிலும் விமர்சித்துள்ளார்.

வெல்லவில்லை

வெல்லவில்லை

கோலி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. அவர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு அந்த அணி நிர்வாகத்திற்கு அவர் நன்றி சொல்ல வேண்டும் என கூறி இருந்தார்.

ஒப்பிட முடியாது

ஒப்பிட முடியாது

மேலும், ரோஹித் சர்மா , தோனி போன்ற மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன்களுடன் அவரை ஒப்பிட முடியாது. அவர் கோப்பை வென்றால். அது பற்றி பேசலாம் எனவும் கடுமையாக பேசி இருந்தார் கம்பீர்.

கோலி சாம்பியன்

கோலி சாம்பியன்

எனினும், கங்குலி கூறுகையில், கோலி என்ன செய்துள்ளார் என பாருங்கள். அவர் பேட்டிங்கில், ஒவ்வொரு வித கிரிக்கெட் போட்டிகளிலும் என்ன செய்துள்ளார் என பாருங்கள். அவர் முழுமையான சாம்பியன். அவர் பெங்களூர் அணியின் கேப்டனாக எத்தனை காலம் வேண்டுமானாலும் இருக்கலாம். நிச்சயம் அந்த அணியின் போக்கை அவர் மாற்றுவார் என்றார்.

சரியான வாதமா?

சரியான வாதமா?

கங்குலி, கிட்டதட்ட ஒருவர் பேட்டிங் செய்தால் மட்டுமே, கேப்டன் பதவியில் எத்தனை காலம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். தொடர்களை வென்று காட்ட வேண்டிய அவசியம் இல்லை என கூறி இருக்கிறார். இது சரியான வாதமா?

இவர்களே உதாரணம்

இவர்களே உதாரணம்

கம்பீர் கூறியது போல ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டன் 7-8 ஆண்டுகளில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாமல் கேப்டன் பதவியில் நீடித்ததில்லை. இதற்கு இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கம்பீர், கங்குலி இருவருமே உதாரணம்.

கம்பீர் நீக்கம்

கம்பீர் நீக்கம்

கம்பீர் இரண்டு முறை கொல்கத்தா அணியை ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்தார். எனினும், அதன் பின் அவர் அணியை பிளே-ஆஃப் கொண்டு செல்ல தடுமாறியதாலும், கருத்து வேறுபாடுகளாலும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கங்குலி நீக்கம்

கங்குலி நீக்கம்

அதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக முதல் சீசனில் இருந்தது கங்குலி தான். அவரும் அணியை பிளே-ஆஃப் அழைத்துச் செல்லவில்லை என்ற காரணத்தால் பின்னர் நீக்கப்பட்டார்.

தோனி நிலையும் அதே தான்

தோனி நிலையும் அதே தான்

அதே போல, புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கு முதல் ஆண்டில் தோனி கேப்டனாக இருந்தார். அந்த தொடரில் அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை என்பதால், அடுத்த தொடரில் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இதை தான், கோலி விஷயத்தில் கம்பீர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Story first published: Thursday, March 21, 2019, 11:23 [IST]
Other articles published on Mar 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+