Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த போலீஸ்காரர் சிரிப்பை பாருங்கய்யா.. ஒரு கூட்டத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய “தலைவன்”கங்குலி!

Recommended Video

Ganguly took a selfie with fans | ஒரு கூட்டத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய கங்குலி!

பெங்களூர் : பெங்களூர் விமான நிலையத்தில் கங்குலி ஒரு கூட்டத்தையே உண்மையான மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஒவ்வொருவர் முகத்தில் இருந்த புன்னகையே அதற்கு சாட்சி.

பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி, உண்மையாகவே தான் ஒரு சிறந்த தலைவன் தான் என்பதை செயல்களின் மூலமாக நிரூபித்து வருகிறார்.

பெங்களூர் சென்ற போது..

பெங்களூர் சென்ற போது..

அதே சமயம், தன் ரசிகர்களையும் அவர் ஏமாற்ற தவறவில்லை. ராகுல் டிராவிட்டை தன் வேலையின் ஒரு பகுதியாக காண வந்த போது தான் பெங்களூர் விமான நிலையத்தில் அந்த சம்பவம் நடந்தது.

பிசிசிஐ தலைவர் கங்குலி

பிசிசிஐ தலைவர் கங்குலி

கங்குலி பிசிசிஐ தலைவராக ஒரு வாரம் முன்பு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதலே தன் பணிகளை அதிரடியாக துவங்கி விட்டார் தலைவர் கங்குலி.

அதிரடி செயல்பாடு

அதிரடி செயல்பாடு

டெஸ்ட் போட்டிகளுக்கு கூட்டம் வராமல் இருப்பதை முதல் வேலையாக எடுத்துக் கொண்ட கங்குலி அதற்கான அதிரடி நடவடிக்கையை துவக்கி ஒரே வாரத்தில் இந்தியாவின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நடத்த மின்னல் வேகத்தில் ஏற்பாடுகளை செய்து விட்டார்.

டிராவிட்டை காண வந்தார்

டிராவிட்டை காண வந்தார்

அடுத்து பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் செயல்பாடுகளை அறியவும், அதன் தலைவர் ராகுல் டிராவிட்டுடன் ஆலோசனை செய்யவும் பெங்களூரு வந்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

ரசிகர்கள் ஆரவாரம்

ரசிகர்கள் ஆரவாரம்

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்த மக்கள் கங்குலியை கண்ட உடன் ஆரவாரம் செய்தனர். சிலர் அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். அதை எந்த வகையிலும் தடுக்கவில்லை கங்குலி.

செல்பி எடுத்த கங்குலி

செல்பி எடுத்த கங்குலி

அப்போது அனைவரையும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியில் ஆழ்த்த முடிவு செய்தார். விமான நிலையத்தில் கங்குலியை சூழ்ந்து நின்ற அனைவரையும் சேர்த்து தன் ஸ்மார்ட்போனில் செல்பி எடுத்தார் கங்குலி.

காவலரின் புன்னகை

காவலரின் புன்னகை

அந்த செல்பி புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதைப் பார்த்த இணையவாசிகள் கங்குலியை புகழ்ந்து வருகின்றனர். அந்த செல்பியில் காவலர் ஒருவரின் முகம் நிறைந்த புன்னகை பலரையும் கவர்ந்தது.

அனைவரும் மகிழ்ச்சி

மேலும், அந்த செல்பியில் பார்த்தால் ஒருவர் விடாமல் அனைவரும் புன்னகையுடன் இருக்கிறார்கள். ஒரே ஒரு செல்பி எடுத்து எல்லோரையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார் தலைவர் கங்குலி.

மவுசு குறையவில்லை

மவுசு குறையவில்லை

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நாளாக நாளாக மவுசு குறையும் என்பார்கள். ஆனால், கங்குலிக்கு மவுசு கூடிக் கொண்டே தான் போகிறது என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே சாட்சி.

முதல்வர் ஆவாரா?

முதல்வர் ஆவாரா?

பிசிசிஐ தலைவர் ஆன கங்குலி அடுத்து மேற்கு வங்காள முதல்வர் ஆக வேண்டும் என்ற குரல்கள் இப்போதே ஒலிக்கத் துவங்கி விட்டன. உண்மையாகவே, தலைவனாக மாறிக் கொண்டு வருகிறார் கங்குலி.

Story first published: Thursday, October 31, 2019, 13:12 [IST]
Other articles published on Oct 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+