Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மத்தவங்களுக்கு திறமையே இல்லையா... தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்னு நினைக்கிறாரா கங்குலி?

டெல்லி :ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான தேர்வாளர்கள் மற்றும் ஐபிஎல் சார்பில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை பிசிசிஐ தலைவர் கங்குலியே தெரிவித்து வருவதாக முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் எத்தகைய சூழலில் முடிவுகளை எடுத்தார்கள் என்பதை அவர்கள் விளக்கமாக வெளியிடுவதை விட்டுவிட்டு அவர்கள் சார்பில் கங்குலியே அனைத்திற்கும் விளக்கம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்வாளர்களின் நிலைப்பாடு குறித்து அவர்கள் பேசாமல் கங்குலி பேசுவது குறித்து சுட்டிக் காட்டியுள்ள வெங்சர்க்கார், அவர்களை கங்குலி குறைவாக மதிப்பிடுகிறாரா அல்லது அவருக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா

நீக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா

ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவரது காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய காயத்தை கவனத்தில் கொண்டு ஐபிஎல் அணியில் மீண்டும் இணைவது குறித்து அவர் முடிவெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

திறமை இல்லையா?

திறமை இல்லையா?

இந்நிலையில் தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷி மற்றும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் ஆகியோரை தங்களது நிலைப்பாடுகள் குறித்து பேசவிடாமல் அவர்கள் சார்பில் சவுரவ் கங்குலியே பேசி வருவதாக முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் தொவித்துள்ளார். அவர்களுக்கு விளக்கம் அளிக்க போதிய திறமை இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலையில் சுமக்கிறார் கங்குலி

தலையில் சுமக்கிறார் கங்குலி

தனக்கு அவர்களை காட்டிலும் அதிக திறமை உள்ளதாக கங்குலி கருதுகிறாரா என்றும் கேட்டுள்ளார் வெங்சர்க்கார். தன்னுடைய தலையில் அனைத்து பொறுப்புகளையும் கங்குலி போட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏன் 'X' நீக்கப்பட்டார், 'Y' ஏன் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்று விளக்கங்களை அளித்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கங்குலி அறிவிப்பு

கங்குலி அறிவிப்பு

ஐபிஎல் நடைபெறும் இடங்கள் உள்ளிட்டவை குறித்தும் கங்குலியே அறிவித்ததையும் வெங்சர்க்கார் குறிப்பிட்டுள்ளார். எப்போதுமே முன்னாள் வீரர்கள்தான் அணியை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் தான் என்றும் அது தற்போது மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?

யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?

பிசிசிஐ பிசியோ ரோகித் பிட்டாக இல்லை என்று கூறியுள்ளதாகவும் ஆனால் ஐபிஎல் பிசியோ அவர் விளையாட அனுமதி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள வெங்சர்க்கார், ஏன் இந்த முரண்பாடு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியை தேர்வாளர்கள் அல்லது பிசிசிஐ நிர்வாகிகள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் கேட்டுள்ளார்.

Story first published: Monday, November 9, 2020, 12:52 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+