Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியை மாற்றிவிட்டு கோஹ்லியை கேப்டனாக்குங்கள்.. 'கட்சி தாவிய' கங்குலி

மும்பை: இந்திய ஒன்டே கிரிக்கெட் அணிக்கு விராட் கோஹ்லியை கேப்டனாக்க பிசிசிஐ முன்வர வேண்டும் என்று முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

டோணியின் தீவிர ஆதரவாளரான கங்குலி, இப்போது விராட் கோஹ்லி பக்கம் பரிந்து பேசியுள்ளார். இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியொன்றில் கங்குலி இவ்வாறு கூறியுள்ளார்.

கங்குலி தெரிவித்துள்ளதாவது: அனைத்து கிரிக்கெட் அணிகளுமே தங்கள் எதிர்காலம் குறித்த திட்டங்களை வைத்திருக்கும். இந்திய கிரிக்கெட் வாரியம், டோணியை அடுத்த உலக கோப்பை நடைபெற உள்ள 2019வரை கேப்டனாகவே தொடர செய்ய போகிறதா என்பதே எனது கேள்வி.

9 வருட கேப்டன்

9 வருட கேப்டன்

டோணி 9 வருடங்களாக தொடர்ந்து கேப்டனாக செயல்படுகிறார். இது நீண்ட காலம். அடுத்த 4 ஆண்டுகளுக்கும், டோணியையே கேப்டனாக தொடரச் செய்வதையா பிசிசிஐ விரும்புகிறது? டோணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிவிட்டார். ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே ஆடிவருவதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

எனர்ஜி வீரர்

எனர்ஜி வீரர்

விராட் கோஹ்லி தன்னை மேம்படுத்தியபடி உள்ளார். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடும் கிரிக்கெட் வீரர்களில் உலகின் நம்பர்-1 வீரர் கோஹ்லிதான். மனதளவில் மிகுந்த எனர்ஜியாக உள்ளார். களத்தில் அவரின் செயல்பாடுகள் அருமை. டெஸ்ட் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

பிசிசிஐ

பிசிசிஐ

இந்த சூழ்நிலையில், டோணியை 2019 உலக கோப்பை வரை கேப்டனாக தொடர செய்வதா அல்லது கோஹ்லியை கேப்டனாக்குவதா என்பதை பிசிசிஐ முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை டோணியையே கேப்டனாக தொடர செய்ய பிசிசிஐ முடிவு செய்தால் அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையே தரும்.

டோணி சிறந்தவர்

டோணி சிறந்தவர்

கோஹ்லியை கேப்டனாக்குவது, டோணியை இழிவு செய்துவிடுவதை போல என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். இந்தியா பார்த்த மிகச்சிறந்த கேப்டன்களில் டோணி ஒருவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

ஆக்ரோஷ கேப்டன்

ஆக்ரோஷ கேப்டன்

கோஹ்லி ஏற்கனவே 17 முறை இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். அந்த காலகட்டங்களில் மொத்தம் 4 சதங்கள் விளாசியுள்ளார். 34 வயதாகும், டோணியைவிட, 27 வயதாகும் கோஹ்லி, ஆக்ரோஷமாக செயல்படுவதாக முன்னணி வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, May 10, 2016, 17:17 [IST]
Other articles published on May 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+