For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சோலி முடியப் போகுது.. அவரால் அவ்வளவா ஆட முடியாது.. ரெடியா இருந்துக்குங்க.. ஷாக் கொடுத்த கங்குலி!

Recommended Video

Sourav Ganguly warns Indian team about Dhoni retirement

மும்பை : தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற நிலையில் இந்திய அணி அவர் இல்லாமல் ஆட தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கங்குலி.

இந்திய அணியில் தோனியின் இடம் கேள்விக் குறியாக இருக்கும் நிலையில், கங்குலி தோனியின் எதிர்காலம் குறித்து பேசி இருக்கிறார்.

அதிலும் தோனி இனிமேல் "அதிகமாக ஆட மாட்டார்" எனவும் சூசகமாக கூறி இருக்கிறார்.

தோனி ஓய்வு?

தோனி ஓய்வு?

2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என கடந்த ஓராண்டாகவே பேச்சு இருந்தது. ஆனால். அப்படி எதுவும் நடக்கவில்லை. தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. எனினும், அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

வெ.இண்டீஸ் தொடர்

வெ.இண்டீஸ் தொடர்

உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்தியா பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இடம் பெறுவாரா? பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு கொடுக்குமா? என்ற கேள்விகள் இருந்தன. தோனி தானாகவே இரண்டு மாதம் ஓய்வு பெற்று அந்த தொடரில் இருந்து விலகினார்.

கேள்விக் குறி

கேள்விக் குறி

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் தோனி இந்திய அணியில் பங்கேற்பாரா? அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் இருக்கிறது. அது குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி தன் கருத்தை கூறி இருக்கிறார்.

ரெடியா இருங்க

ரெடியா இருங்க

இந்திய கிரிக்கெட் அணி இனி தோனி எப்போதும் ஆட மாட்டார், நீண்ட நாட்கள் ஆட மாட்டார் என்பது பழகிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார் கங்குலி. ஓய்வு முடிவை தோனி தான் எடுக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

கங்குலி எச்சரிக்கை

கங்குலி எச்சரிக்கை

கிட்டத்தட்ட இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார் கங்குலி. தோனி அணியில் இருந்தால் அது வேறு மாதிரியான அணியாக இருக்கும். குறிப்பாக பந்துவீச்சில், பீல்டிங்கில் தோனியின் சில முடிவுகள் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அது எல்லாம் இனி இருக்காது என்பதை இந்திய அணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார் கங்குலி.

மாரடோனா கூட அப்படி தான்

மாரடோனா கூட அப்படி தான்

எத்தனை பெரிய வீரராக இருந்தாலும் அந்த விளையாட்டில் அவர் ஓய்வு பெற்றுத் தான் ஆக வேண்டும். கால்பந்தில் மாரடோனாவும் ஒருநாள் ஓய்வு பெற வேண்டிய நிலை வந்தது. அவரை விட பெரிய வீரர் இருக்க முடியாது என்று குறிப்பிட்டுக் காட்டினார் கங்குலி.

இது தான் சிஸ்டம்

இது தான் சிஸ்டம்

மேலும், டெண்டுல்கர், லாரா, பிராட்மேன் எல்லோரும் ஓய்வு பெற்றார்கள். இந்த வழியில் தான் இந்த சிஸ்டம் வேலை செய்கிறது. இப்படி தான் வேலை செய்யும் என்றும் தோனி ஓய்வு பற்றி பேசினார் கங்குலி.

தோனி தான் சொல்லணும்

தோனி தான் சொல்லணும்

தோனி, கோலி, சச்சின் போன்ற வீரர்கள் சில காலம் ஆடுவார்கள். அதன் பின் அவர்கள் மீது எதிர்பார்ப்பு வந்து விடும். அவர்கள் குறிப்பிட்ட வழியில் ஆடி, போட்டிகளை வெல்வார்கள். மேலும், ஓய்வு முடிவை தோனி தான் எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார் கங்குலி.

காஷ்மீரில் இருந்து வந்தார்

காஷ்மீரில் இருந்து வந்தார்

தோனி இரண்டு மாத ஓய்வின் ஒரு பகுதியாக காஷ்மீரில் இந்திய இராணுவத்தினருடன் 16 நாட்கள் செலவிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது விளம்பரப் படங்களில், நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார். அடுத்து அவர் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆகும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது,

அடுத்த தொடர்

அடுத்த தொடர்

இந்திய அணி அடுத்து ஆட உள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும்? என்பதைத் தாண்டி தோனி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, August 28, 2019, 16:16 [IST]
Other articles published on Aug 28, 2019
English summary
Sourav Ganguly warns Indian team about Dhoni retirement
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+