Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA T20 - MI கனவை கலைத்த காவ்யா மாறன்.. அதிரடி வீரர்களை அள்ளிய அம்பானியின் எம்ஐ கேப் டவுன்

கேப் டவுன்: SA 20 லீக் தொடருக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்சின் கனவை காவ்யா மாறன் கலைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐபிஎல் பாணியில் நடைபெறும் இந்த தொடரில், அனைத்து அணிகளையும் ஐபிஎல் அணி நிர்வாகிகளே வாங்கியதால், இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் வழக்கம் போல் MI கேப்டவுன் அணி பலமான அணியை தேர்வு செய்தாலும் முக்கிய வீரர்களை இழந்தது.

அதிக ஆர்வம்

அதிக ஆர்வம்

ஏலத்திற்கு முன்பே எம்.ஐ.அணி ரஷித் கான், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ரபாடா மற்றும் திவால்ட் பிராவிஸ் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலமே எம்ஐ கேப் டவுன் அணி, பலமான அடித்தளத்தை அமைத்தது. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் அதிரடி வீரர் டிரிஸ்டியன் ஸ்டப்சை ஏலத்தில் எடுக்க எம்ஐ நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டியது.

கனவு கலைந்தது

கனவு கலைந்தது

ஆனால், இதற்கு சன்ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே தடையாக இருந்தது. ஸ்டப்சை வாங்குவதில் இருவருக்குள் கடும் போரே நிகழ்ந்தது. இறுதியில், 4 கோடியே 14 லட்சம் ரூபாய் அளவுக்கு ஏலத் தொகை சென்று, சன்ரைசர்ஸ் அணி ஸ்டர்சை வாங்கியது. இதனால் எம்.ஐ. அணி நிர்வாகம் ஏமாற்றம் அடைந்தது. ஸ்டப்ஸ் வந்திருந்தால், எம்.ஐ அணியின் கிரீடத்தில் கோஹினூர் வைரம் போல் இருந்திருப்பார்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

எனினும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓடியன் ஸ்மித்தை 72 லட்சம் ரூபாய்க்கும், அதிரடி வீரர் வெண்டர் டுசனை ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய்க்கும் எம்.ஐ. கேப் டவுன் அணி ஏலத்தில் எடுத்தது. இதே போன்று தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் பியூரான் ஹேண்ட்டிரக்ஸ், ரியான் ரிக்கல்டன், ஜார்ஜ் லிண்டே ஆகியோரை கேப் டவுன் அணி ஏலத்தில் எடுத்தது.

எம்ஐ கேப் டவுன் அணி விவரம்

எம்ஐ கேப் டவுன் அணி விவரம்

ரபாடா, டிவால்ட் பிரவீஸ், ரஷித் கான், லியாம் விலிங்ஸ்டோன், சாம் கரண், வெண்டர்டுசன், ரியான் ரெக்கல்டன், ஜார்ஜ் லிண்டே, பியூரான் ஹெண்டரிக்ஸ், டுவான் ஜென்சன், டிலானோ, கிராண்ட் ஃரோபிலோசன், வீஸ்லி மார்ஸ்ஷல், ஒலி ஸ்டோன், வகார் சலாம்கியில், ஷியாத் அப்ரஹாம், ஒடியன் ஸ்மித்

Story first published: Tuesday, September 20, 2022, 20:39 [IST]
Other articles published on Sep 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+