Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

118 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா... இங்கிலாந்து வீரர்கள் மிரட்டல்.. பிராடு, ராபின்சன் கலக்கல்

லண்டன்: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.

முதல் நாள் ஆட்டம், மழையால் பாதிக்கப்பட்டது. 2வது நாள் ஆட்டம் எலிசபெத் மகாராணி காலமானதால், கைவிடப்பட்டது.

துல்லியமான பந்துவீச்சு

துல்லியமான பந்துவீச்சு

இந்த நிலையில், 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டி தொடங்கியதும் இரு அணி வீரர்களும் எலிசபெத் மகாராணி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். போட்டி தொடங்கியதுமே ராபின்சன், ஸ்டுவர்ட் பிராடு மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் துல்லியமாக பந்துவீசி தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தனர்.

36 ரன்களுக்கு 6 விக்கெட்

36 ரன்களுக்கு 6 விக்கெட்

தென்னாப்பிரிக்க கேப்டன் டின் எல்கார் 1 ரன்னிலும், சாரல் எர்வி டக் அவுட்டாகியும், கீகன் பீட்டர்சன் 12 ரன்களிலும். ரியன் ரிக்கில்டன் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, கெயில் வெர்ரைன் டக் அவுட் ஆனார். வியான் முல்டர் 3 ரன்களில் வெளியேற, தென்னாப்பிரக்க அணி 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

118 ரன்களில் சுருண்டது

118 ரன்களில் சுருண்டது

காயா சொண்டோ ஒரு அளவிற்கு தாக்குப் பிடித்து 57 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதே போன்று யான்சன் கடுமையாக போராடி 30 ரன்கள் சேர்க்க, இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 118 ரன்களில் ஆட்டமிழந்தது. இது இங்கிலாந்து மண்ணில் தென்னாப்பிரிக்கா அடித்த 4வது குறைந்தபட்ச ஸ்கோராகும். ஸ்டுவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ராபின்சன் 5 விக்கெட்டும், ஆண்டர்சன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

இதனையடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கினர்.வழக்கம் போல் பேஷ்பால் யுத்தியை பயன்படுத்தி அதிரடியாக அட முற்பட்டனர். ஆனால், தென்னாப்பிரிக்க வீரர் யான்சென் பந்துவீச்சில் அலெக்ஸ் லீஸ் 13 ரன்களிலும், சாக் கிராலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் ஆலிவ் போப்,ஜோ ரூட் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. 16 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் உள்ளது.

Story first published: Saturday, September 10, 2022, 20:55 [IST]
Other articles published on Sep 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+