Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

13 சிக்ஸ்,13 பவுண்டரி.. 83 பந்தில் 174 ரன்கள்.. பேயாட்டம் ஆடிய கிளாஸன்.. கண்ணீர்விட்டு கதறிய ஸாம்பா!

செஞ்சுரியன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஹென்ரிக் கிளாசன் 83 பந்துகளில் 13 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 83 பந்துகளில் 174 ரன்கள் விளாசி மிரள வைத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் இரு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 3வது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது. இந்த நிலையில் 4வது ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

South Africa batter Heinrich Klaasen Scored 174 Runs of just 83 balls against Australia in Centurion

இப்படியொரு முடிவை எடுத்ததற்காக ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் நிச்சயம் வருந்தியிருப்பார். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் அந்த அளவிற்கு வேற லெவலில் இருந்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஹென்ரிக்ஸ் 28 ரன்களிலும், டி காக் 45 ரன்களிலும், கேப்டன் மார்க்ரம் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 25.1 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் அதிரடி வீரர் கிளாஸன் களம் புகுந்தார். தொடக்கத்தில் நிதானம் காட்டிய கிளாஸன் 25 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் அதிரடிக்கு திரும்பிய கிளாஸன் 38 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் அடுத்த கியருக்கு மாறிய கிளாஸன் 57 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். இவரை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறினர். ஒவ்வொரு ஓவருக்கும் கிளாஸனின் அதிரடி உக்கிரமாகி கொண்டே சென்றது.

57 பந்துகளில் சதம் விளாசிய கிளாஸன், 77 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். அதன்பின்னர் ஸாம்பா வீசிய 48வது ஓவரில் மட்டும் 26 ரன்கள் விளாசப்பட்டது. 40வது ஓவருக்கு பின் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களான நேதன் எல்லீஸ், ஸ்டாய்னிஸ், ஹேசல்வுட் என்று யாராலும் கிளாஸனை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறப்பாக ஆடிய அவர் 83 பந்துகளில் 13 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 174 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இவருடன் மில்லரும் சேர்த்து அதிரடியாக 45 பந்துகளில் 82 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா 10 ஓவர்கள் வீசி விக்கெட் இன்றி 113 ரன்களை வாரி வழங்கி இருக்கிறார். அதேபோல் ஸ்டாய்னிஸ் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் வீழ்த்தி 81 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். கிளாஸனின் அதிரடி ஆட்டம் தொடர்பான வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Friday, September 15, 2023, 21:36 [IST]
Other articles published on Sep 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+