கங்காரு படையை சுருட்டிய தென்னாப்பிரிக்கா.. பிரீட்ஸ்கே சதம், கேசவ் மகராஜ் சுழலில் வீழ்ந்த ஆஸ்திரேலியா
டர்பன்: டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 168 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது ஜோடி சேர்ந்த மேத்யூ பிரீட்ஸ்கே மற்றும் மார்கோ ஜான்சென் இணை ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த பிரீட்ஸ்கே 106 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 112 ரன்கள் குவித்தார். அதிரடி காட்டிய மார்கோ ஜான்சென் 59 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார்.

இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவிக்க, தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 297 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. ஆஸ்திரேலிய தரப்பில் நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் அதிரடி தொடக்கம் தந்தார். அவர் வெறும் 36 பந்துகளிலேயே 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாச, ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் குவித்து மிரட்டியது. அதனால் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெறும் என்றே அனைவரும் எண்ணினர்.
ஆனால், சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் களமிறங்கியதும் ஆட்டம் தலைகீழாக மாறியது. அனுபவ சுழற்பந்து வீச்சை வெளிப்படுத்திய மகராஜ் 9.2 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை அள்ளி ஆட்டத்தைத் திருப்பினார். மேட் ரென்ஷா 44 ரன்கள், கூப்பர் கானோலி 38 ரன்கள் எடுத்து போராடிய போதிலும், ஆஸ்திரேலிய அணி 41.2 ஓவர்களில் 230 ரன்களுக்கு சுருண்டது.
"சச்சின் அளவுக்கு ஆடினீங்க ஆனா அவரளவுக்கு பணம் சம்பாதிச்சீங்களா?" ஸ்டீவ் வாக் கேள்விக்கு ரஹானே பதில்
பியோர்ன் போர்டுயின், கார்பின் போஷ் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். அபார சதம் விளாசியதுடன் களத்தில் 3 அற்புத கேட்ச்களைப் பிடித்த பிரீட்ஸ்கே ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.


Click it and Unblock the Notifications
