For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா.. வெளுத்து வாங்கிய ரூஸோ.. இங்கிலாந்துக்கு நிகழ்ந்த சோகம்

கார்டிஃப்: இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிஃப் நகரில் நடைபெற்றது.

Recommended Video

ENG vs SA T20I Series: தெரிஞ்சிக்க வேண்டிய Squads, Broadcast Details | Aanee's Appeal

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது ஆட்டத்தில் களம் இறங்கியது.

டாஸ் வென்ற கேப்டன் பட்லர் பந்து வீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய குயிண்டன் டிக்காக், ஹென்ட்ரிக்ஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

டி காக் 15 ரன்களில் வெளியேற பவர்பிளே முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 58 ரன்கள் அடித்தது. ரிசா ஹெண்டிரிக்ஸ் 32 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார்.இதில் மூன்று பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். தென்னாப்பிரிக்க அணிக்கு 6 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய ருஸோ, தனது இரண்டாவது ஆட்டத்திலேயே அதிரடியை காட்டினார்.

96 ரன்கள்

96 ரன்கள்

ரூஸோ 37 ரன்கள் எடுத்திருந்த போது பட்லர் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். அதுவே இங்கிலாந்துக்கு இடியாக அமைந்தது. இங்கிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் பறக்கவிட்ட அவர் 55 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டர்களும், 5 சித்தர்களும் அடங்கும். கிளாசின் 19 ரன்களும் ஸ்டப்ஸ் 15 ரர்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.

இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்து தோல்வி

தொடக்க வீரராக ஜேசன் ராயுடன், பட்லர் களம் இறங்கினார். ஜேசன் ராய் 20 ரன்களும், பட்லர் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 5 ரன்களும், மொயின் அலி 28 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 92 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடு வரிசையில் களமிறங்கிய பாரிஸ் டோ 30 ரன்கள் சேர்த்தார். லிவிங் ஸ்டோன் 18 ரன்கள் மட்டுமே அடித்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 16.4 ஓவர்லே இங்கிலாந்து அணி 149 ரன்கள் அனைத்து விக்கெட்களும் இழந்தது.

பந்துவீச்சாளர்கள் அபாரம்

பந்துவீச்சாளர்கள் அபாரம்

முதல் டி20 போட்டியில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்த தென்னாபிரிக்கா வீரர் ஆண்டில் பிலேக்வாயு, இந்த ஆட்டத்தில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற் பந்துவீச்சாளர் ஷாம்சியும் நான்கு ஓவருக்கு 27 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சம நிலையில் உள்ளது.

Story first published: Friday, July 29, 2022, 12:35 [IST]
Other articles published on Jul 29, 2022
English summary
South africa beat England by 41 runs and level the t20 seriesதொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா.. வெளுத்து வாங்கிய ரூஸோ.. இங்கிலாந்துக்கு நிகழ்ந்த சோகம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+