Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: தென்னாப்பிரிக்கா வெறியாட்டம்.. கனடாவும் பேட்டிங்கில் தந்த பதிலடி

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா அணி கனடாவை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்து கனடாவுக்கு வலுவான இலக்கை நிர்ணயித்தது.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் எய்டன் மார்க்ரம் 32 பந்துகளில் அதிரடியாக 59 ரன்கள் குவித்து முன்நின்று வழிநடத்தினார். திலோன் ஹெய்லிகரின் இரண்டாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து ரன் குவிப்பைத் தொடங்கினார். குவிண்டன் டி காக் 22 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார், சாத் பின் ஜாஃபரின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி தனது பங்களிப்பை வழங்கினார்.

ரியான் ரிக்கல்டன் 21 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். இறுதியில் டேவிட் மில்லர் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி 23 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இதே போன்று டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 19 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

214 ரன்கள் இலக்கை துரத்திய கனடா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கனடாவுக்காக நவ்னீத் தலிவால் தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பை அரைசதத்தை பதிவு செய்தார். 48 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய அவர், கார்பின் போஷ் பந்துவீச்சில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார். ஹர்ஷ் தாக்கேர் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் யாரும் ரன்கள் சேர்க்கவில்லை.

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில், மார்கோ ஜான்சென் சாத் பின் ஜாஃபர் மற்றும் ஜஸ்கரன்தீப் சிங் விக்கெட்டுகளை எடுத்து, ஹாட்ரிக் வாய்ப்பையும் உருவாக்கினார். கார்பின் போஷ் ஒரு விக்கெட்டையும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கேசவ் மஹராஜ் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்தார், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இதனிடையே நாளை பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இரவு 7 மணிக்கு பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த முறை, டி20 உலககோப்பையில் பாகிஸ்தானை அமெரிக்கா வீழ்த்திய நிலையில், தற்போது அமெரிக்கா பலமான அணியாக விளங்குகிறது.

Story first published: Monday, February 9, 2026, 22:58 [IST]
Other articles published on Feb 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+