உலக டெஸ்ட் கோப்பையை வென்றதும் தலையை குனிந்து கண்ணீர் சிந்திய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை முதல்முறையாக தென்னாப்பிரிக்க அணி வென்று சாதனை படைத்திருக்கிறது.
எனினும் உலக கோப்பையை தென்னாப்பிரிக்கா வென்றது இதுவே முதல் முறையாகும். முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி 212 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி 138 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனால் 74 ரன்கள் முன்னணி பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 207 ரன்கள் எடுத்தது.

இதன் காரணமாக 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இதற்கு முன்பு 280 ரன்கள் மேல் வெறும் இரண்டு முறை தான் வெற்றிக்கரமாக எட்டடப்பட்டிருக்கிறது. இதனால் தென் ஆப்ரிக்க அணி தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்க்கரம் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த பவுமா, சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அணி வெற்றி ரன்களை அடித்தபோது புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த வீரர்களின் கேலரியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பவுமா திடீரென்று தலையை கீழே குனிந்து தன்னுடைய கண்ணீரை சிந்தினார். அவர் எந்த ஒரு கொண்டாட்டத்தையும் முகத்தில் காட்டவில்லை.
அதன் பின் நிர்வாகிகள்,வீரர்கள் பவுமாவை கட்டி அணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக பவுமா பல்வேறு கேலி கிண்டல்களை சந்தித்து இருக்கின்றார். பவுமா கேப்டனாக பொறுப்பேற்ற போது கருப்பின வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தான் இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் திறமைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என பல தென்னாப்பிரிக்கா வீரர்கள் வெளிப்படையாக குற்றச்சாட்டினர்.
எனினும் இது எல்லாம் காதில் கேட்டுக்கொண்டு தற்போது செயலில் தாம் ஒரு சிறந்த கேப்டன் என்பதை பவுமா காட்டி இருக்கிறார். பல இன்னல்களை கேலிகளை சந்தித்ததால் பவுமா இந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications