Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.. தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா பேச்சு..பேட்டியில் கேலி செய்த போலாக்

டி20 உலக கோப்பையில் வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோற்றது ஜீரணிக்க முடியவில்லை என்று தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பெவுமா தெரிவித்துள்ளார்.

கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்தால் அரையிறுதி சுற்றுக்கு சென்றிருக்க முடியும்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. 159 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதன் மூலம் தொடரை விட்டு தென்னாப்பிரிக்க அணி வெளியேறியது. தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பெவுமா, இந்த தோல்வி மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.இந்த ஆட்டத்திற்கு முன்பு வரை நாங்கள் சிறப்பாகவே இந்த தொடரில் விளையாடினோம். இது கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய போட்டி என்று எங்களுக்கு தெரியும்.

ஜீரணிக்க முடியவில்லை

ஜீரணிக்க முடியவில்லை

ஆனால் மறுபடியும் முக்கியமான ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை தழுவி விட்டோம். நிச்சயமாக இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையும் உறுதியும் எங்கள் அணி வீரர்களுக்கு இடையே இருந்தது. இது போன்ற தோல்வியில் காரணங்களை நாம் பல சொல்லலாம். முதலில் நான் டாஸில் தவறான முடிவை எடுத்து விட்டேன் என நினைக்கிறேன்.

தவறு செய்தோம்

தவறு செய்தோம்

முதலில் நான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து விட்டேன். அப்படி செய்து நல்ல தொடக்கத்தை நாங்கள் பந்துவீச்சில் செய்யவில்லை. நெதர்லாந்து அணியை 158 ரன்கள் அடிக்க வைத்து விட்டோம். பேட்டிங் செய்யும்போது பாகிஸ்தான் அணியிடம் நாங்கள் என்ன தவறு செய்தோமோ அதையே இந்த ஆட்டத்திலும் செய்திருக்கிறோம்.

கிண்டல்

கிண்டல்

முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தோம். பேட்டிங் செய்ய ஆடுகளம் அவ்வளவு கடினமாக ஒன்றும் இல்லை. ஆனால் மைதானத்தில் உள்ள பவுண்டரி சுற்றளவை எங்களை விட நெதர்லாந்து வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். நாங்கள் மொத்தத்தில் நல்ல அணியாக செயல்படவில்லை என்று பெவுமா கூறினார். இந்த நிலையில் பெவுமா பேசி முடித்த பிறகு வர்ணனையாளர் போலாக் உங்கள் பயணம் மகிழ்ச்சியாக அமையட்டும் என்று கிண்டல் செய்தார்.

வார்த்தையே வரவில்லை

வார்த்தையே வரவில்லை

இதனைத் தொடர்ந்து வெற்றி குறித்து பேசிய நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வேர்ட்ஸ், எனக்கு வார்த்தையே வரவில்லை. ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இதே போன்ற ஆடுகளங்கள் தான் நெதர்லாந்திலும் இருக்கிறது. இதனால் 160 ரன்கள் என்ற இலக்கை நாங்கள் தற்காத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. நிச்சயமாக இது சிறந்த அனுபவம் தான். அடுத்த உலக கோப்பைக்கு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Story first published: Sunday, November 6, 2022, 10:44 [IST]
Other articles published on Nov 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+