Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிவில்லியர்ஸ், கிரேம் ஸ்மித், பவுச்சர் மீது நிறவெறி புகார்- வெடித்தது சர்ச்சை, ரசிகர்கள் அதிர்ச்சி..

ஜோகனஸ்பர்க்: கிரிக்கெட்டில் முன்பு எல்லாம் ஆட்டங்களை பற்றியும்,சாதனைகளை பற்றியும் பேசுவோம். ஆனால் இப்போது சர்ச்சைகளை பற்றி பேசவே நேரம் போதவில்லை.

Recommended Video

AB de Villiers, Smith, Boucher மீது Racism புகார் | OneIndia Tamil

தென்னாப்பிரிக்க அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றது இல்லை.ஆனால் சர்ச்சைகளுக்கும், நிறவெறி புகாருக்கும் என தனி போட்டி வைத்தால் அதில் அந்த அணி தான் சாம்பியன்.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்தில், அந்த அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஐ.சி.சி,. தடை விதித்தது.

நிறவெறி புகார்

நிறவெறி புகார்

இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக தான் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆனால் அணியில் இருக்கும் கருப்பின வீரர்களை, வெள்ளையர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்துள்ளனர். கருப்பின வீரர்களை அவதூறாக நடத்துவது அவர்களைஅணியில் சேர்க்காமல் தனித்து விட செய்வது என பல இன்னல்கள் நடந்துள்ளது

பரபரப்பு அறிக்கை

பரபரப்பு அறிக்கை

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் நடைபெறும் நிறவெறி புகாரை விசாரிக்க,எஸ்.ஜே.என். குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த குழு நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான கிரேம் ஸ்மித், மார்க் பவுச்சர், டிவில்லியர்ஸ் ஆகியோர் நிறவெறியுடன் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

மார்க் பவுச்சர்

மார்க் பவுச்சர்

இதில் கருப்பின வீரர்களை உருவ கேலி செய்வது, பட்ட பெயர் வைத்து அழைப்பது போன்ற செயல்களில் பவுச்சர் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பவுச்சர், அறியாத காலத்தில் இதனை செய்துவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார்.மார்க் பவுச்சர் தற்போது தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

டீன் எல்கார் விளக்கம்

டீன் எல்கார் விளக்கம்

இதனிடையே, இந்த நிறவெறி புகார் குறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் கேப்டன் டீன் எல்கார், கிரிக்கெட்டுக்கு வெளியே நிறைய சம்பவங்கள் நடைபெறுவதாகவும், ஆனால் தாங்கள் ஒரு அணியாக இருந்து அனைத்தையும் எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். எங்களது பயிற்சியாளருக்கு பின்னால் நின்று ஆதரவு அளிப்போம் என்று குறிப்பிட்ட எல்கார், இந்தியாவை வீழ்த்துவதிலேயே தற்போது கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

Story first published: Wednesday, December 22, 2021, 7:25 [IST]
Other articles published on Dec 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+