Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட பாவமே ! கேமிரா மோதியதில் கீழே விழுந்த வீரர்.. ஆஸி, தென்னாப்பிரிக்க டெஸ்டில் பரபர சம்பவம் - வீடியோ

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவை விட 197 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

எனினும் சதத்தை கொண்டாடும்போது அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார்.

ஸ்பைடி கேமரா

ஸ்பைடி கேமரா

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் நோக்கியாவுக்கு காயம் ஏற்பட இருந்தது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். கிரிக்கெட்டை அதிநவீன தொழில்நுட்பத்தில் ரசிகர்களுக்கு நேரலை செய்ய வேண்டும் என்பதற்காக பலவிதமான கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 360 டிகிரி கோணத்தில் வீரர்கள் விளையாடுவதை காட்டுவதற்காக பயன்படுத்தும் கேமரா தான் ஸ்பைடி.

தடையாக மாறுகிறது

தடையாக மாறுகிறது

எட்டுக்கால் பூச்சி போல் இந்த கேமரா இருப்பதால் அதற்கு அந்த பெயர் வைக்கப்பட்டது. இந்த கேமராவால் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் அடித்த பந்தை சிஎஸ்கே வீரர் பிடிக்க வரும்போது ஸ்பைடி கேமராவில் பந்து பட்டு அவருக்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

வீரர் காயம்

வீரர் காயம்

இதைப் போன்று பல போட்டிகளில் வீரர்கள் அடித்த பந்து நேராக ஸ்பைடி கேமராவில் பட்டு சிக்ஸர் போகாமல் எல்லாம் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஸ்பைடி கேமரா மைதானத்தை சுற்றி வந்த போது தென்னாப்பிரிக்கா வீரர் நோக்கியா மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய நோக்கியா கீழே விழுந்தார்.

தப்பித்த நோக்கியா

தப்பித்த நோக்கியா

இதனை அடுத்து அங்கிருந்து வீரர்கள் அனைவரும் நோக்கியாவை நோக்கி ஓடி பார்த்தனர். ஆனால் அவர் பெரிய காயம் ஏதும் இன்றி மீண்டும் எழுந்து நின்றார். இதனால் சிறிது நேரம் போட்டி தடைப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஸ்பைடி கேமராவை தடை செய்ய வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கேமிராவின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் ஆகும்.

Story first published: Tuesday, December 27, 2022, 15:52 [IST]
Other articles published on Dec 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+