Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க அணியில் 14வயது சிறுவன்.. இந்தியாவுக்கு எதிராக பலே திட்டம்.. அப்படி என்ன ஸ்பெஷல்??

மும்பை: இந்திய அணியை சமாளிப்பதற்காக 14வயது இந்திய சிறுவனை தென்னாப்பிரிக்க அணி பயன்படுத்தி வருகிறது.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்டி டி20 தொடரில் மோதுகிறது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் ஜூன் 9ம் தேதி தொடங்கி வரும் ஜுன் 19ம் தேதி முடிவடைகிறது.

சவால் தரும் இந்திய அணி

சவால் தரும் இந்திய அணி

இந்திய அணியை சொந்த மண்ணில் சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனென்றால் அயல்நாட்டு களங்களில் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் பிட்ச்-கள் இருக்கும். ஆனால் இந்திய களங்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியின் பலமே ஸ்பின்னர்களாக தான்.

Recommended Video

IND vs SA South Africa அணியில் 14வயது இந்திய சிறுவன் | *Cricket
புதிய நெட் பவுலர்

புதிய நெட் பவுலர்

இந்நிலையில் ஸ்பின்னர்களை சமாளிப்பதற்காக தென்னாபிரிக்க அணி ஸ்பெஷல் பயிற்சியை எடுத்து வருகிறது. அந்தவகையில் 14 வயதே ஆகும் இந்திய சிறுவன் ஒருவனை வலைப்பயிற்சி பவுலராக நியமித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. அந்த சிறுவன் வீசும் சுழற்பந்துவீச்சை, தென்னாப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சமாளித்து வருகின்றனர்.

அப்படி என்னதான் ஸ்பெஷல்

அப்படி என்னதான் ஸ்பெஷல்

ரானக் வகேலா என்ற அந்த சிறுவன், டெல்லியில் உள்ள வெங்கடேஷ்வர் கிரிக்கெட் அகாடமியில் விளையாடி வருகிறார். டெல்லியின் அண்டர் 16 அணியிலும் இடம்பெற்றிருந்தார். தென்னாப்பிரிக்க அணியில் ஆர்தோடாக்ஸ் பின்னர்கள் இல்லை என்பதால் இவர் வரவழைக்கப்பட்டுள்ளார். இவரை சமாளித்தால் தான் இந்திய அணியில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பவுலிங்கை சமாளிக்க முடியும்.

வாழ்நாள் பாடம்

வாழ்நாள் பாடம்

இதுகுறித்து பேசிய அந்த சிறுவன், சர்வதேச வீரர்களுக்கு தற்போதே பவுலிங் வீசுவது பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். அவர் எப்படி ஷாட்களை தேர்வு செய்கின்றன, உடனடியாக எப்படி லைன் மற்றும் லெந்த்-ஐ புரிந்துக்கொண்டு ஆடுகின்றனர், ஆகியவற்றை நன்கு கற்றுக்கொண்டுள்ளேன். அதற்கேற்றார் போல பவுலிங்கில் சவால் கொடுத்து வருகிறேன். இந்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் எனக்கூறியுள்ளார்.

Story first published: Monday, June 6, 2022, 19:03 [IST]
Other articles published on Jun 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+