For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோனது? முக்கியமான தொடரை விட்டு வெளியேற முடிவு

மெல்போர்ன் : ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்குகிறது.

Recommended Video

IND vs ENG 1st ODI: India முறியடித்த Records | Aanee's Appeal

இந்த போட்டிக்கு தரவரிசை பட்டியலில் உள்ள டாப் எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

ஆனால் தற்போது தென்னாப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

உலககோப்பை வாய்ப்பு

உலககோப்பை வாய்ப்பு

இதனால் தென்னாப்பிரிக்கா அணி எஞ்சியுள்ள இந்தியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் உள்ள ஒரு நாள் போட்டிகளில் வென்றால் மட்டுமே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும். இல்லையெனில் எஞ்சியுள்ள இரண்டு இடங்களை தீர்மானிக்க நடைபெறும் உலகக் கோப்பை தகுதி சுற்றுப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்.

தென்னாப்பிரிக்கா கோரிக்கை

தென்னாப்பிரிக்கா கோரிக்கை

இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்கா அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் டி20 போட்டிகள் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. இதில் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றால் மட்டுமே அது வெற்றி பெறும் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அந்த தொடரை ஒத்தி வைக்க தென்னாப்பிரிக்கா கோரிக்கை விடுத்தது.

கைவிரித்த ஆஸி

கைவிரித்த ஆஸி

ஆனால் அதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை. வரும் மே மாதத்திற்குள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற ஐசிசி காலக்கெடுவை நிர்ணயத்துள்ளது. மே மாதத்தில் டாப் எட்ட இடத்தில் இருக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிடும் . மே மாதத்திற்குள் போட்டியை நடத்த முடியாது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கை விரித்தது .

தடாலடி முடிவு

தடாலடி முடிவு

இதனை அடுத்து ஒரு நாள் தொடரிலிருந்து விலகுவதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தடாலடி முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகளில் கிடைக்க வேண்டிய புள்ளிகள் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்று விடும். இதனால் தென்னாப்பிரிக்கா அணி நேரடியாக உலக கோப்பை தொடரில் பங்குபெறும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது

Story first published: Wednesday, July 13, 2022, 22:55 [IST]
Other articles published on Jul 13, 2022
English summary
South africa Forefeit Australia odi series made their chance to play in world cup very difficultதென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோனது? முக்கியமான தொடரை விட்டு வெளியேற முடிவு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+