Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது.

டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் 141 ரன் மற்றும் 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்தது. மழையால் கடைசி ஒரு நாள் ஆட்டம் பாதியில் ரத்தானது.

இதைத் தொடர்ந்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

தாக்கு பிடிப்பார்களா?

தாக்கு பிடிப்பார்களா?

டெஸ்டில் போதிய அனுபவம் இல்லாத இந்திய இளம் வீரர்கள், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொண்டு, ரன்களை திரட்டப்போகிறார்கள் என்பதுதான் பிரதான கேள்வி.

வெற்றிப் பயணம் தொடருமா?

வெற்றிப் பயணம் தொடருமா?

நடப்பு ஆண்டில் டெஸ்டில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா மட்டும் தான். 6 வெற்றிகளை வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இந்த வெற்றிப்பயணத்தை வெளிநாட்டிலும் தொடருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. கடைசியாக இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 8 டெஸ்டுகளில் (இங்கிலாந்துடன் 4, ஆஸ்திரேலியாவுடன் 4) படுதோல்விகளை சந்தித்த அனுபவம் இருக்கிறது.

டெண்டுல்கர் இடத்தில் யார்?

டெண்டுல்கர் இடத்தில் யார்?

சச்சின் டெண்டுல்கர் விடைபெற்று விட்டதால், அவரது 4-வது வரிசையில் கோஹ்லி ஆடுவார் என்று தெரிகிறது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள நமது அணியில், இந்திய துணை கண்டத்தை தவிர்த்து வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்த ஒரே வீரர் கோஹ்லிதான் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம்.

நம்பிக்கை தரும் ஜாகீர்ஹான்

நம்பிக்கை தரும் ஜாகீர்ஹான்

பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த ஜாகீர்ஹான் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சிகரமான விஷயம். அவர் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் ஸ்விங் மற்றும் ஷார்ட்-பிட்ச் பந்துகளை வீசும் யுக்தியை சாதுர்யமாக கையாண்டால், நிச்சயம் எதிரணி பேட்ஸ்மேன்களை தடுமாற வைக்க முடியும்.

வலுவான தென்னாப்பிரிக்கா

வலுவான தென்னாப்பிரிக்கா

உலகின் முதல் நிலை அணியான தென்னாப்பிரிக்கா கடந்த 2 ஆண்டுகளில் உள்ளூரில் தோற்றதில்லை. பேட்டிங்கிலும் சரி, பந்து வீச்சிலும் அந்த அணி வலுவானதாக திகழ்கிறது. ஸ்டெயின், வெரோன் பிலாண்டர், மோர்னே மோர்கல் ஆகிய பந்துவீச்சாளர்களே அவர்களின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இவர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிப்பதை பொறுத்தே ஆட்டம் கடைசி நாள் வரை செல்லுமா? என்பதை சொல்ல முடியும்.

Story first published: Wednesday, December 18, 2013, 9:59 [IST]
Other articles published on Dec 18, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+