Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 2026: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு.. சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு.. முக்கிய வீரர்கள் இல்லை

டர்பன்: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைப் பொறுப்பை எய்டன் மார்க்ரம் ஏற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை சமீபத்தில் மாற்றிய குவின்டன் டி காக் மற்றும் காயத்திலிருந்து மீண்டு வந்த அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரும் இந்த அணிக்குள் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். இது அணியின் பலத்தை அதிகரிக்கும் ஒரு முக்கியமான தேர்வாகப் பார்க்கப்படுகிறது.

கார்பின் போஷ், சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரெவிஸ், டோனி டி சோர்சி, டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, குவெனா மபாகா மற்றும் ஜேசன் ஸ்மித் ஆகியோர் தங்கள் முதல் டி20 உலகக் கோப்பை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ரையான் ரிகல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு அணியில் இடமில்லாமல் போனது.

குறிப்பாக, சமீபத்திய போட்டிகளில் ஜேசன் ஸ்மித்தின் அற்புதமான ஆட்டம்தான் அவருக்கு அணியில் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. 2024 ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணியில் இருந்த ஸ்டப்ஸுக்குப் பதிலாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய சுற்றுப்பயணத்தின் போது விலா எலும்பு காயம் காரணமாக வெள்ளைப் பந்து தொடரில் கலந்துகொள்ளாமல் இருந்த காஜிசோ ரபாடா மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார். 2024 ஆடவர் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் முன்னணி விக்கெட் வீழ்த்திய அன்ரிச் நார்ட்ஜேவும் அணியில் இணைந்திருப்பது பந்துவீச்சுக்கு மேலும் பலம் சேர்க்கிறது.

பேட்டிங் பிரிவில் மார்க்ரம், டி காக், டோனி டி சோர்சி, டெவால்ட் பிரெவிஸ், ஜேசன் ஸ்மித், டேவிட் மில்லர் மற்றும் டோனோவன் ஃபெரீரா ஆகியோர் உள்ளனர். லுகி என்கிடி மற்றும் கார்பின் போஷ் ஆகியோருடன் காஜிசோ ரபாடா, குவெனா மபாகா, நார்ட்ஜே ஆகியோர் வேகப்பந்துவீச்சை வலுப்படுத்துகிறார்கள்.

சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை, கேஷவ் மஹாராஜ் முக்கிய சுழல் பந்துவீச்சாளராகச் செயல்படுவார். அவருக்கு ஜார்ஜ் லிண்டே துணையாக இருப்பார். அணித்தலைவர் மார்க்ரம் மற்றும் ஃபெரீரா ஆகியோரும் பந்துவீச்சில் பங்களிக்கக்கூடியவர்கள். மார்கோ ஜான்செனும் அணியில் ஒரு முக்கிய ஆல்ரவுண்டராக இடம்பெற்றுள்ளார்.

ரையான் ரிகல்டன் போன்ற ஒரு வீரருக்கு அணியில் இடமில்லாமல் போனதற்கு, எய்டன் மார்க்ரம் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் போன்ற சிறந்த வீரர்கள் டாப் ஆர்டரில் இருப்பது ஒரு முக்கிய காரணம். அணித் தேர்வுக் குறித்து பேசிய தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், "நாங்கள் மீண்டும் ஆசிய கண்டத்திற்குத் திரும்புகிறோம். அண்மையில் அங்கு இந்திய அணியுடன் விளையாடிய போட்டி அனுபவம், இந்தத் தொடருக்கு எங்களுக்கு நிச்சயம் பெருமளவு கைகொடுக்கும்.

உலகக் கோப்பை அணியில் தேர்வாகிய பல வீரர்கள் அந்த இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்தனர். அவர்கள் அங்கு சந்திக்கக்கூடிய ஆடுகளங்கள் குறித்து நேரடியாக அனுபவம் பெற்றவர்கள். இது இந்தியாவுக்குச் சென்றவுடன் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உலகக் கோப்பைக்குச் புறப்படுவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு டி20 தொடர் உள்ளது, அதற்கான அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கல், இந்தக் குழுவின் சிறப்பு ஆலோசகராகச் செயல்படுவார். தென்னாப்பிரிக்க ஆடவர் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பாட்ரிக் மோரோனி, புதிதாக உலகக் கோப்பையில் அறிமுகமாகும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, "தென்னாப்பிரிக்க அணிக்காக முதன்முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் கடினமான அணித் தேர்வாக இருந்தது, அனால் இது அவர்களுக்குக் கிடைத்த நம்பமுடியாத வாய்ப்பு" என்றார்.

மேலும் அவர், "சில பெரிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் இந்த அணி மிகவும் வலிமையானது என்றும் இந்தியா மற்றும் இலங்கையில் வெற்றிபெற அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்றும் நாங்கள் நம்புகிறோம். உலகின் சிறந்த மற்றும் அனுபவமிக்க வீரர்களையும், சிறந்த இளம் டி20 திறமைகளையும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த அணியை நாங்கள் கட்டமைத்துள்ளோம்" என்று கூறினார்.

தென்னாப்பிரிக்கா, டி20 உலகக் கோப்பை 2026-ன் 'டி' குழுவில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இதுவரை ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் நூலிழையில் கோப்பையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை 2026 இல் களமிறங்கும் தென்னாப்பிரிக்க அணியின் விவரங்கள் :

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குவின்டன் டி காக், டோனி டி சோர்சி, டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சென், கேஷவ் மஹாராஜ், காஜிசோ ரபாடா, குவெனா மபாகா, லுகி என்கிடி, ஜேசன் ஸ்மித், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், அன்ரிச் நார்ட்ஜே.

Story first published: Friday, January 2, 2026, 18:56 [IST]
Other articles published on Jan 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+