Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA T20 - தென்னாப்பிரிக்கா நடத்தும் புதிய டி20 தொடர்.. நாளை நடைபெறும் ஏலம்.. நீங்கள் அறிய வேண்டியவை

டர்பன் : ஐபிஎல் பாணியில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் புதிய டி20 தொடர் ஒன்றை நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள இருந்த அணிகள் அனைத்தையும் ஐபிஎல் அணிகளே வாங்கியது.

இதனால், இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு பிறகு அதிக சம்பளம் கிடைக்கும் தொடராக இது கருதப்படுகிறது.

வரும் ஜனவரி மாதம் ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்ய ஏலம் நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது.

6 அணிகள் விவரம்

6 அணிகள் விவரம்

தென்னாப்பிரிக்க டி20 தொடரில் எம்.ஐ. கேப் டவுன், டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியாஸ் கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 533 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆனால் அனைவரின் பெயரும் ஏல மேடைக்கு வராது.

எத்தனை வீரர்கள்

எத்தனை வீரர்கள்

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வீரர்களை வாங்க பயன்படுத்தலாம். அதாவது நம்ம ஊர் பணத்திற்கு 15 கோடியே 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இதில், ஒவ்வொரு அணியும் 17 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம். இதில் 10 பேர் தென்னாப்பிரிக்க வீரர்களாக இருக்க வேண்டும். 7 வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். பிளேயிங் லெவனில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம்.

ஓப்பந்தமான வீரர்கள்

ஓப்பந்தமான வீரர்கள்

இதுவரை 6 அணிகளும் ஏலத்திற்கு முன்பே 23 வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இதில் சூப்பர் கிங்ஸ் அணி டுபிளஸிஸ், மொயின் அலி, மகீஷ் தீக்சனா, ரொமியோ செஃபர்ட் , ஜெரால்ட் கோயிட்சேவை தேர்வு செய்துள்ளது. எம்.ஐ. கேப்டவுன் அணி ரபாடா, ரஷித் கான், டேவால்ட் பிரவீஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண் ஆகிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வீரர்கள் அடிப்படை விலை

வீரர்கள் அடிப்படை விலை

இந்த ஏலத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் 80 லட்சம் ரூபாய், 78 லட்சம் ரூபாய், 39 லட்சம் ரூபாய் என மூன்று பிரிவுகளில் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் ஓடியன் ஸ்மித், ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் 80 லட்சம் ருபாய் பிரிவிலும், மார்கன், ஆதில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, ஜிம்மி நீஷம் ஆகியோர் 78 லட்சம் ரூபாய் பிரவிலும், டீன் எல்கார், பிட்டோரியஸ், டப்ரைஸ் ஷாம்சி ஆகியோர் 49 லட்சம் ரூபாய் பிரிவிலும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

Story first published: Sunday, September 18, 2022, 18:45 [IST]
Other articles published on Sep 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+