Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை தான் கடைசி.. கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ஓய்வு முடிவு!

துபாய் : தென்னாப்பிரிக்கா வீரர் ஜேபி டுமினி, 2019 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும், தான் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையில் இடம்?

உலகக்கோப்பையில் இடம்?

டுமினி தற்போது இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து உலகக்கோப்பைக்கான அணித் தேர்வில் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். 2019 உலகக்கோப்பையுடன் தன் ஒருநாள் போட்டி பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளார்.

காரணம்

காரணம்

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் டுமினி. தற்போது 34 வயதாகும் நிலையில், இனி குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிவு செய்துள்ள டுமினி, டி20 போட்டிகளில் மட்டும் பங்கேற்க உள்ளார். ஆல்-ரவுண்டரான டுமினி 193 ஒருநாள் போட்டிகளில் 5047 ரன்கள் மற்றும் 68 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

ஓய்வு

ஓய்வு

இந்த உலகக்கோப்பை தொடருடன் டுமினி மட்டுமல்லாது, கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட வீரர்களும் ஓய்வு பெற உள்ளனர். இந்தியாவின் தோனியும் உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்தியாக கூறப்படுகிறது

தென்னாப்பிரிக்கா வெல்லுமா?

தென்னாப்பிரிக்கா வெல்லுமா?

டுமினி கடந்த 2011 மற்றும் 2015 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடியுள்ளார். மூன்றாவது மற்றும் கடைசி முறையாக 2019 உலகக்கோப்பை தொடரில் ஆடவுள்ளார். தென்னாப்பிரிக்க அணி இதுவரை உலகக்கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், டுமினியின் கடைசி தொடரில் அந்த அணி கோப்பை வெல்லுமா?

Story first published: Friday, March 15, 2019, 18:41 [IST]
Other articles published on Mar 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+