Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னாடா கொரோனாவால வந்த சோதனை... விட்றா விட்றா... தென்னாப்பிரிக்கா காரன்டா

கேப் டவுன் : கொரோனா தொற்று காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்க அணியினர் கொல்கத்தாவிலிருந்து துபாய் வழியாக இன்று தங்களது நாட்டிற்கு சென்றுள்ளனர்.

இங்கிருந்தபோது ஒரு பந்தைகூட அவர்கள் விளையாடவில்லை தர்மசாலாவில் மழையாலும் மற்ற இரு போட்டிகள் கொரோனாவாலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

South Africa Players to undergo a 14-day period of self-isolation

ஆயினும் இந்தியாவின் தர்மசாலா, லக்னோ, கொல்கத்தா, டெல்லி, மற்றும் துபாய் ஆகிய இடங்களுக்கு அவர்கள் சென்றதால், தற்போது அவர்கள் அவர்களது நாட்டில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு பின்பு அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எப்படியெல்லாம் எல்லாரையும் துன்புறுத்திப் பார்த்திட்டுருக்கு. கொரோனா வந்தவங்க ஒருபக்கம் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில கொரோனா வந்துடுமோன்னு பயப்படுறவங்கதான் அதிகமாக இருக்காங்க. அப்படிப்பட்ட நிலைமை உலகம் பூரா இருக்கு. இதுக்கு விளையாட்டு வீரர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன...

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆவலுடனும்தான் வந்தாங்க. ஆனால் இங்க ஒரு பந்த கூட விளையாடாத நிலையில் அவங்க நாட்டு திரும்ப வச்சிருக்கு கொரோனா. அவங்க தர்மசாலாவில ஆடவிருந்த முதல் போட்டி மழையால தடைபட்டுச்சு. அடுத்த இரண்டு போட்டி கொரோனா பாதிப்பு அதிகமானதால பிசிசிஐ-ஆல ரத்து செய்யப்பட்டிருக்கு.

இந்த நிலையில, தங்களோட ஊருக்கு போறதுக்காக கொல்கத்தாவுல காத்திருந்தாங்க தென்னாப்பிரிக்க வீரர்கள். நேத்து பிளைட்ட புடிச்சி துபாய் வழியா தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற அவங்களுக்கு அடுத்த அதிர்ச்சி. அவங்க 14 நாள் தனிமையில பரிசோதனைகளை செஞ்சிக்கனும்னு கிரிக்கெட் தென்னாபிரிக்கா சொல்லியிருக்கு.

இந்தியா டூருக்காக டெல்லி, கொல்கத்தா, லக்னோ, தர்மசாலா, துபாய் போன்ற இடங்களுக்கு சென்றிருக்காங்க. அவங்களுக்கு அந்த இடத்திலெல்லாம் சிறப்பான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுருக்கு. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா அவங்க தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்காங்கன்னு கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவோட மருத்துவ அதிகாரி டாக்டர் ஷூயிப் மஞ்ச்ரா தெரிவிச்சிருக்காரு.

இந்த 14 நாட்கள் பரிசோதனை மற்றும் தனிமைச்சிறைக்கு பின்பே தென்னாப்பிரிக்கா வீரர்கள் தங்களது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, March 18, 2020, 19:32 [IST]
Other articles published on Mar 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+