
இந்திய போட்டி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பெர்த் நகரத்தில் வேகப்பந்துவீச்சுக்கு தான் அதிக சாதகமாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அக்ஷரை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் பயன்படுவார்.

தென்னாப்பிரிக்காவின் திட்டம்
இந்நிலையில் இந்தியாவை சமாளிக்க தென்னாப்பிரிக்கா பல கட்ட திட்டங்களுடன் களமிறங்குகிறது. இதற்காக அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமாவையே நீக்கவுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே பவுமாவின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. அதாவது கடந்த 30 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் தான் அடித்துள்ளார். எனவே வெகுவிரைவாக விக்கெட் விழக்கூடாது என ரீசா ஹெண்ட்ரிக்ஸ் சேர்க்கப்படவுள்ளார். அவர் 144 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அட்டகாச ஃபார்மில் உள்ளார்.

ஷாம்சி திடீர் நீக்கம்
இதே போல சுழற்பந்துவீச்சில் முன்னணி வீரரான டாப்ரைஸ் ஷாம்சி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நடப்பு தொடரில் அவர் சிறப்பாக விளையாடிய போதும், இந்தியாவுக்கு எதிராக ஷாம்சிக்கு மோசமான ரெக்கார்ட் உள்ளது. இதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான களம் என்பதால் ஷாம்சியை நீக்கிவிட்டு, லுங்கி இங்கிடியை கொண்டு வரவுள்ளனர்.

4 அட்டகாச பவுலர்கள்
தென்னாப்பிரிக்கா வீரர்கள் அசால்டாக 145+ வேகத்தில் வீசக்கூடியவர்கள். பெர்த் களத்திற்கு ஏற்ற வகையில் இன்று ககிஸ்கோ ரபாடா, ஆண்ட்ரிக் நார்ட்ஜே, வெயின் பார்னெல், லுங்கி இங்கிடி என 4 அட்டகாச வேகப்பந்துவீச்சாளர்கள் களமிறங்குகின்றனர். இதனால் இந்திய பேட்டிங் வரிசைக்கு சிக்கல் தான்.


Click it and Unblock the Notifications











