Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம சிஎஸ்கேவில் ஆடிய அல்பி மோர்கல் ஓய்வை அறிவித்தார்.. இனிமே ஐபிஎல்-ல பார்க்க முடியாது!!

Recommended Video

நம்ம சிஎஸ்கேவில் ஆடிய அல்பி மோர்கல் ஓய்வை அறிவித்தார்- வீடியோ

கேப் டவுன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அல்பி மோர்கல் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியில் கடைசியாக 2015இல் இடம் பெற்ற அவர் பல்வேறு நாடுகளின் டி20 தொடர்களில் பங்கேற்று வந்தார். தற்போது 37 வயதான நிலையில் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் ஆடியவர்

சிஎஸ்கே அணியில் ஆடியவர்

அல்பி மோர்கல் சிஎஸ்கே அணியில் ஆடியதன் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பிரபலமானவர். தென்னாபிரிக்கா அணியில் 1 டெஸ்ட், 58 ஒருநாள் போட்டிகள், 50 டி20 போட்டிகள் ஆடி உள்ளார் அல்பி மோர்கல்.

வயதானதால் ஓய்வு

வயதானதால் ஓய்வு

2004ஆம் வருடம் தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இவர் கடைசியாக 2015இல் தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடினார். 37 வயதான காரணத்தினால் தன் ஓய்வை அறிவித்தார். நாட்டுக்காக ஆடியது பெரிய மரியாதை என குறிப்பிட்டுள்ளார் அல்பி.

சகோதரர் மோர்னே மோர்கல்

சகோதரர் மோர்னே மோர்கல்

இவரது சகோதரர் மோர்னே மோர்கல் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்தார். மோர்னே மார்கல் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து அல்பி மோர்கலும் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் நண்பர்

ஏபி டி வில்லியர்ஸ் நண்பர்

கடந்த ஆண்டு தன் ஓய்வை அறிவித்த ஏபி டி வில்லியர்ஸ், அல்பி மோர்கல் மற்றும் மோர்னே மோர்கல்-இன் நண்பர் ஆவார். இவர்கள் மூவரும் ஒன்றாக தங்கி கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபட்டனர். பிற்காலத்தில் மூவருமே தங்கள் முத்திரையை பதித்த நிலையில், மூவரும் ஓராண்டு இடைவெளிக்குள் தங்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.

Story first published: Thursday, January 10, 2019, 12:32 [IST]
Other articles published on Jan 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+