Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பாக டெலிவரி செய்த ஹோட்டல் ஊழியர்.. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு வியூகம் பேஸ்புக்கில் லீக்கானது

செஞ்சூரியன்: நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க பவுலர் டேல் ஸ்டெயினுக்கு அனுப்பப்பட்ட ஐடியாக்கள் அடங்கிய டிப்ஸ், வேறு ஒருவரின் கையில் சிக்கி தற்போது அம்பலமாகியுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியரினில் நடக்கிறது.

South Africa's bowling plans leaked after being delivered to wrong hotel room

இதையடுத்து, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சமாளிக்க தென் ஆப்பிரிக்க முன்னணி பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு வியூகம் அமைத்து கொடுத்தார் கோச். இதற்காக ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும், அவர்கள் எந்த ஷாட்டுகளில் வீக்கானவர்கள் என்று குறிப்பிட்டு ஒரு பட்டியலை தயாரித்து, டேல் ஸ்டெயின் தங்கியிருந்த சேன்ட்டான் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், ஸ்டெயின் அறைக்கு பதிலாக வேறு ஒரு வாடிக்கையாளர் அறைக்கு அது டெலிவரியானது. அந்த நபர் பிரித்துபார்த்துவிட்டு அதை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து கேலி செய்துள்ளார்.

இப்படி தப்பாக போய் மாட்டிக்கொண்டது உண்மைதான் என்று தென் ஆப்பிரிக்க அணி செய்தித்தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.

இதுபோன்ற தர்மசங்கடங்கள் கிரிக்கெட் அணிகளுக்கு ஏற்படுவது புதிது கிடையாது. 2001ம் ஆண்டு, ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தபோது ஆஸி. பயிற்சியாளர் ஜான் புச்சன்னன், சீன தத்துவம் ஒன்றை எழுதி அனுப்பி வீரர்கள் அறைக்கு அனுப்பினார். அது இங்கிலாந்து பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த அறைக்கு டெலிவரி செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

Story first published: Wednesday, August 19, 2015, 17:50 [IST]
Other articles published on Aug 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+