Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்ஸ்மேன்களின் எதிரி.. ஓய்வை அறிவித்தார் டேல் ஸ்டெயின்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேல் ஸ்டெயின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்.

சர்வதேச அளவில் பல்வேறு நாட்டு பேட்ஸ்மேன்களை திணறவைத்து தென்னாப்பிரிக்க அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஸ்டெயின்

ஸ்டெயின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுட் ஸ்விங்கிற்கு புகழ்பெற்ற டேல் ஸ்டெயின் சரியான ஃபார்மில் இல்லாததன் காரணமாக கடந்த சில வருடங்களாக தென்னாப்பிரிக்க அணியில் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்து வந்தார். எனினும் உள்நாட்டு தொடர்களில் அவர் பங்கேற்றிருந்தார். டி20 உலகக்கோப்பை தொடரில் கண்டிப்பாக டெல் ஸ்டெயினின் பங்கேற்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

இந்நிலையில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 20 வருடங்களாக பயிற்சிகள், போட்டிகள், பயணங்கள், வெற்றிகள், தோல்விகள், விமர்சனங்கள், உறவுகள் என பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. இன்று அந்த நினைவுகளுடன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். எனக்காக உடன் இருந்த அணியினர், ரசிகர்கள், குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் எனக்குறிப்பிட்டுள்ளார்.

அனுபவ வீரர்

அனுபவ வீரர்

கடந்த 2005ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ஸ்டெயின், இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்களை எடுத்துள்ளார். இதில் 26 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்களும், 47 டி20 போட்டிகளில் பங்கேற்று 64 விக்கெட்களும் கைப்பற்றியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில், டேல் ஸ்டெயின் கடைசியாக 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடினார். இதே போல கடந்தாண்டு ஃபிப்ரவரி மாஅதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் விளையாடியதே கடைசி சர்வதேச போட்டியாகும்.

முன்னாள் வீரர்கள் வாழ்த்து

முன்னாள் வீரர்கள் வாழ்த்து

ஸ்டெயினின் ஓய்வு அறிவிப்பு குறித்து ட்வீட் செய்துள்ள டிவில்லியர்ஸ், சிறந்த வீரர், சிறந்த மனிதர், அற்புதமான நினைவுகள் எனப்புகழ்ந்துள்ளார். இதே போல இந்திய முன்னாள் வீரர் சேவாக், உங்களின் ஆட்டத்தில் தான் நான் சிறந்த ஆட்டத்தை பார்த்தேன். சிறந்த மனிதர் நீங்கள், தொடர்ந்து வெற்றி பயணம் தொடங்கட்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, August 31, 2021, 17:32 [IST]
Other articles published on Aug 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+