உலககோப்பை - குயின்டன் டி காக் 4வது சதம்.. சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா.. நியூசிக்கு இமாலய இலக்கு
புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 358 ரன்கள் இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் நடப்பு உலகக்கோப்பை தொடரில் நான்காவது சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இரு அணிகளும் மோதும் 32 வது லீக் ஆட்டம் புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பெவுமா 24 ரன்கள் ஆட்டம் இழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு குயிண்டன் டி காக் ,வெண்டர் டூசன் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி முதலில் பொறுப்பாக விளையாடிய பிறகு அதிரடியை காட்டியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறினர். சிறப்பாக விளையாடிய குயிண்டன் டீ காக் 103 பந்துகளில் சதம் விளாசினார். இது நடப்பு உலகக்கோப்பை தொடரில் குயின்டட் டி காக்கிற்கு நான்காவது சதமாகும்.
மறுமுனையில் வெண்டர் டூசன் 101 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்களை சேர்த்தது. டி காக் 114 ரன்களில் ஆட்டம் இழக்க சிறப்பாக விளையாடிய வெண்டர் டூஷன் 133 ரன்கள் அடித்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் 5 இமாலய சிக்சர்களும் அடங்கும். இறுதியில் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.
இதில் இரண்டு பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும். கிளாசன் 15 ரன்களும், ஏய்டன் மார்க்கிரம் ஆறு ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 50 ஓவர் முடிவு தென்னாப்பிரிக்கா அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் சேர்த்தது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் 15 சிக்சர்களை விளாசினர். நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் அதிகபட்சமாக சவுதி 10 ஓவர்கள் வீசி 77 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
10 ஓவர்களில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் தென்னாபிரிக்க அணி தொடர்ந்து எட்டாவது முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications