Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs RSA: கடைசி 5 ஓவர்களில் 39 ரன்கள் தானா.. சொதப்பிய தென்னாப்பிரிக்கா.. மாஸ் காட்டிய மேக்ஸ்வெல்!

லக்னோ: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 312 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டி காக் - கேப்டன் பவுமா கூட்டணி களமிறங்கினர். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர். இதன்பின் நிதானமாக ஆடிய பவுமா 55 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

South Africa Set a target of 312 runs for Australia to win the World Cup 2023

ஆனால் இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிய டி காக் 51 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியை விளாசினார். இதன்பின் இவருடன் இணைந்த வான் டர் டஸன் 26 ரன்களில் ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர் மார்க்ரம் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டி காக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 19வது சதத்தை விளாசி அசத்தினார். ஆனால் சதம் விளாசிய பின் 109 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தென்னாப்பிரிக்கா அணி 25 ஓவர்களில் 197 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன்பின் மார்க்ரம் - கிளாஸன் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தது. பவுண்டரியாக இருவரும் விளாசி தள்ள, 40 ஓவர்களில் 232 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதன்பின் ஆடம் ஸாம்பா வீசிய 43வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய் மார்க்ரம் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே மார்க்ரம் 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன்பின் கிளாஸனும் 29 ரன்களில் வெளியேறினார்.

South Africa Set a target of 312 runs for Australia to win the World Cup 2023

இருப்பினும் மில்லர் - மார்கோ யான்சன் கூட்டணி இணைந்து சில பவுண்டரிகளை அதிரடியாக விளாசியது. இதனிடையே இவர்காளுக்கு ஆஸ்திரேலிய அணியினர் இரு கேட்ச்களையும் கோட்டைவிட்டனர். இதனால் 49வது ஓவரிலேயே தென்னாப்பிரிக்கா அணி 300 ரன்களை கடந்தது. கடைசி ஓவரில் டேவிட் மில்லர் மற்றும் யான்சன் இருவருமே ஆட்டமிழக்க, அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Thursday, October 12, 2023, 18:24 [IST]
Other articles published on Oct 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+