Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ச்சி.. சோக்கர்ஸ் பெயர் எங்களுக்கு மட்டும்தான்.. நமீபியா அணியிடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா!

விண்ட்ஹோக்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நம் நமீபியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நமீபியா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ஆச்சரியம் கொடுத்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு சோக்கர்ஸ் என்ற பெயர் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய போது, அந்த பெயரை தென்னாப்பிரிக்கா அணி தூக்கி எறிந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் தாங்கள் ஒரு சோக்கர்ஸ் என்பதை தென்னாப்பிரிக்கா அணி நிரூபித்துக் காட்டி இருக்கிறது.

South Africa Shocks

நமீபியா அணிக்கு எதிராக ஒரேயொரு டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. அனுபவம் வாய்ந்த டி காக் 1 ரன்னிலும், ரீசா ஹென்ரிக்ஸ் 7 ரன்களிலும், கேப்டன் டோனவன் ஃபெரைரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

நமீபியா அணி தரப்பில் ட்ரம்பில்மேன் 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 135 ரன்கள் என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது. அந்த அணிக்காக ஸ்டீன்கேம்ப் - ஃபெரைலிக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஃபரைலிக் 7 ரன்களிலும், ஸ்டீன்கேம்ப் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து வந்த நிக்கோல் ஈட்டன் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் எராஸ்மஸ் 21 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின் வந்த ஸ்மிட் 12 ரன்களிலும், க்ரூகர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் நமீபியா அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து க்ரீன் - ட்ரெம்பில்மேன் கூட்டணி இணைந்து அதிரடியாக விளையாடியது.

இதனால் கடைசி 2 ஓவர்களில் நமீபியா அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4, 2, 2, 2, 1 மற்றும் ஒய்டு உட்பட 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இத்னால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாக இருந்தது. சிமிலானே வீசிய முதல் பந்திலேயே க்ரீன் சிக்ஸ் அடிக்க, கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது பவுண்டரி விளாசி அசத்தினார்.

இதனால் தென்னாப்பிரிக்கா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியா அணி வீழ்த்தி அசத்தி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி இப்படி அசோசியேட் அணிகளிடம் தோல்வியடைவது முதல்முறையல்ல. ஏற்கனவே 2022 டி20 உலகக்கோப்பையின் போது நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியை மீண்டும் ரசிகர்கள் சோக்கர்ஸ் என்று கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.

Story first published: Saturday, October 11, 2025, 22:58 [IST]
Other articles published on Oct 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+