Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு.. பலமான வீரர்களை களமிறக்கிய Proteas

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கான தங்களது அணியை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிக்குச் சென்று 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இடம் பிடித்தது. இந்த எழுச்சியுடன், அவர்கள் வரும் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றும் நோக்கத்தில் உள்ளனர்.

கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தென்னாப்பிரிக்க அணி தொடங்கும். பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் போட்டியில் , அந்த அணி வலுவான துவக்கத்தை எதிர்பார்க்கிறது. தற்போதைய தென்னாப்பிரிக்க அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், எதிர்கால நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை பெவுமா வழிநடத்துவார். இதில் இந்தியாவில் நடந்த ICC ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில பங்கேற்ற 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர், இந்த அணியில் ஐடன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் க்ளாசென் மற்றும் டேவிட் மில்லர் போன்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் இடம் பெற்றுள்ளன. டோனியர் டி சோர்சி மற்றும் ரியான் ரிக்கெல்டன் போன்ற புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்கள் சவுத் ஆப்ரிக்காவின் அணியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோனியர் டி சோர்சி, ரியான் ரிக்கெல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் வியான் மல்டர் ஆகியோர் ஐசிசி தொடரில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் கோப்பைக்கான சவுத் ஆப்ரிக்காவின் முழு அணி பின்வருமாறு: பெவுமா (கேப்டன்), டோனியர் டி சோர்சி, ராசி வான் டர் டூசன், ஐடன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் க்ளாசென், டேவிட் மில்லர், வியான் மல்டர், மார்கோ ஜான்சன், காகிசோ ரபாडा, கேஷவ் மஹராஜ், லுங்கி என்ஜிடி, தப்ரேஸ் ஷம்சி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், அன்ரிச் நோர்ட்ஜே.தென்னாப்பிரிக்க அணி எப்போதுமே பெரிய தொடரில் சோக் ஆகும் நிலையில், தற்போது, அந்த அணி, ஐசிசி தொடரி ல் தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை போன்ற தொடரில், பட்டம் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மில்லர், ஏய்டன் மார்க்கரம் போன்ற வீரர்கள் வீணடிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, January 13, 2025, 18:50 [IST]
Other articles published on Jan 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+