Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு..அதிரடி வீரருக்கு இடமில்லை!இந்திய தொடருக்கும் அறிவிப்பு

டர்பன் : டி20 உலக கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் பெவுமா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இம்மாதம் இறுதியில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் வீரர் டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் விளையாடுகிறார்.

வெண்டர் டுசன் காயம்

வெண்டர் டுசன் காயம்

பெவுமா காயம் காரணமாக சமீப இங்கிலாந்து தொடரில் காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்திய தொடருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்காகவும் அவர் திரும்பி உள்ளார். கடந்த டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக ரன்கள் அடித்த வெண்டர் டுசன் இம்முறை காயம் காரணமாக அணியில் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது கைவிரலில் காயம் ஏற்பட்டது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆறு வாரம் காலம் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடவில்லை. ரிலே ரூஸோவ் , வெயின் பார்னல், ஸ்டெப்ஸ் ஆகியோர் தென்னாப்பிரிக்காவில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஐந்து டி20 சர்வதேச போட்டியில் விளையாடி 296 ரன்கள் குவித்துள்ள ஹேண்ட்ரிக்ஸ் தென்னாபிரிக்க அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளராக ஆண்ட்ரிட்ஜ் நோக்கியா, ரபாடா மற்றும் லுங்கி நெகிடி ஆகியோரும் சுழற் பந்துவீச்சாளராக தப்ரைஸ் ஷாம்சி, கேசவ் மகாராஜா ஆகியோரும் டி20 உலக கோப்பை அணியில் தேர்வாகியுள்ளனர்.சிஎஸ்கே வீரர் பிரிட்டோரியஸ் ஆல் ரவுண்டராக அணியில் இடம் பெற்றுள்ளார். பிலாக்குவாலியோ, மார்க்கோ யான்சன், பார்ட்டியூன் ஆகியோர் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பில்லக் வால்யூ மற்றும் ஜெனிமான் மாறன் ஆகியோர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி விவரம்

தென்னாப்பிரிக்க அணி விவரம்

பெவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ரீசா ஹேன்றிக்ஸ், கிளாசென், கேசவ் மகாராஜா, ஏய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆண்ரிச் நோக்கியா, வெய்ன் பார்னல், டிவைன் பிரிட்டோரியஸ், ரபாடா,ரூஸ்சோவ், தப்ரைஸ் ஷாம்சி,ஸ்டப்ஸ்

கூடுதல் வீரர்கள் - பிலாக்குவாலியோ, மார்க்கோ யான்சன், பார்ட்டியூன்

Story first published: Wednesday, September 7, 2022, 13:44 [IST]
Other articles published on Sep 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+