Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றம்.. டேவிட் மில்லர் உள்பட 3 பேருக்கு காயம்

மும்பை: தென்னாப்பிரிக்காவின் டி20 உலகக்கோப்பை 2026 அணியில் அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி இந்தியாவில் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த அணியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரியான் ரிகெல்டன் மற்றும் நடுவரிசை பேட்ஸ்மேன் டிரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக டோனி டி சோர்சி மற்றும் டொனோவன் ஃபெரீரா ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

டோனி டி சோர்சி கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயமடைந்தார். இந்த காயத்தில் இருந்து அவரால் முழுமையாக மீள முடியவில்லை. இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடரிலும், முக்கியமாக டி20 உலகக்கோப்பையிலும் அவரால் பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், மற்றொரு வீரரான டொனோவன் ஃபெரீரா, ஜனவரி 17 அன்று நடைபெற்று முடிந்த SA20 போட்டியில் ஜாபர்ஜ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது காயமடைந்தார். பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட இந்த காயத்தால் அவரது இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது, இதனால் உலகக்கோப்பையில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் இந்த மாற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளது. "ப்ரோடீஸ் அணியின் பேட்ஸ்மேன்களான டோனி டி சோர்சி மற்றும் டொனோவன் ஃபெரீரா ஆகியோர் காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரிலிருந்தும், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை 2026 தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்," என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "15 பேர் கொண்ட அணியில் இவர்களுக்குப் பதிலாக ரியான் ரிகெல்டன் மற்றும் டிரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள்" என்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையில், அனுபவமிக்க நடுவரிசை பேட்ஸ்மேன் டேவிட் மில்லரும் இப்போதைக்கு காயமடைந்துள்ளார். இருப்பினும், அவர் தென்னாப்பிரிக்காவின் டி20 உலகக்கோப்பை 2026 அணியில் தொடர்ந்து நீடிக்கிறார். அவரது பங்கேற்பு குறித்த இறுதி முடிவு, வரும் நாட்களில் எடுக்கப்படும் உடற்தகுதிச் சோதனையின் முடிவைப் பொறுத்தே அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்லர் சமீபத்தில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது, அவரது அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டது. "டேவிட் மில்லர் திங்களன்று பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது அடிவயிற்று தசை காயத்தால் பாதிக்கப்பட்டார். மேலும் டி20ஐ தொடரில் பங்கேற்க மாட்டார். அவரது டி20 உலகக் கோப்பைக்கான கிடைக்கும் தன்மை, உடற்தகுதிச் சோதனையின் முடிவைப் பொறுத்தே அமையும்," என்று கூறப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு மில்லருக்குப் பதிலாக ரூபின் ஹெர்மன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Friday, January 23, 2026, 7:00 [IST]
Other articles published on Jan 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+