For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 
கோஹ்லிக்கு முதல் தொடர் தோல்வி…. புதிய பாடம் கற்றுத் தந்த தெ.ஆ அனுபவம்!

By Staff

சென்சூரியன்: மூன்று போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்து, தொடரை இந்தியா இழந்துள்ளது.

தொடர்ந்து, 9 டெஸ்ட தொடர்களை வென்று சாதனை படைத்த கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான அணிக்கு இது நல்ல பாடத்தை கற்றுத் தந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், 10 தொடர்களில், ஒரு டிரா மற்றும் தொடர்ந்து, 9 தொடர்களில் வெற்றி என்று ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது இந்திய அணி. 2014ல் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி, 4 போட்டித் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

டோணியிடமிருந்து பெற்ற பின்னர்

டோணியிடமிருந்து பெற்ற பின்னர்

அதன்பிறகு கேப்டன் பொறுப்பை கேப்டன் கூல் டோணியிடம் இருந்து இளம் வீரரான விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. அவருடைய தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து, 9 தொடர்களில் வென்று சாதனைப் படைத்தது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இன்டீஸ், இலங்கை, வங்கதேசம் என அனைத்து அணிகளையும் வென்றது.

பருப்பு வேகவில்லை

பருப்பு வேகவில்லை

ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான தென்னாப்பிரிக்காவில் விராட் கோஹ்லி அணியின் பருப்பு வேகவில்லை. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும், கடைசி இன்னிங்சில் மிகவும் சுலபமான இலக்கு இருந்தபோதும், இந்திய அணியால் தென்னாப்பிரிக்காவின் வேகத்தை தாக்கு பிடிக்கவில்லை. முதல் டெஸ்டில் 208 ரன்களும், சென்சூரியனில், 287 ரன்களும் வெற்றி இலக்காக இருந்தபோதும், நமது பேட்டிங் வரிசை ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் போல மாறியதால், தொடரை இழக்க நேர்ந்தது.

மற்றொரு தொடரையும் இழந்தது

மற்றொரு தொடரையும் இழந்தது

தென்னாப்பிரிக்கா அணி, 2015ல் இந்தியா வந்தபோது, 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று இந்தியா வென்றிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இதுவரை தொடரை இந்தியா வென்றதில்லை. அங்கு இதுவரை நடந்த 6 தொடர்களில், 5ல் தென்னாப்பிரிக்கா வென்றது, ஒன்று டிராவானது. உள்ளூரில் புலி, வெளியே எலி என்று காலங்காலமாக கூறப்பட்டு வரும் விமர்சனம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இன்டீஸ், இலங்கைக்கு சென்று இந்தியா தொடரை வென்றது ஆனால், அந்த அணிகளின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, இந்த வெற்றி தானாக வந்த வெற்றி அல்ல, அவர்களாக கொடுத்த வெற்றி.

பேட்டிங்கில் சொதப்பல்

பேட்டிங்கில் சொதப்பல்

இந்திய அணி இந்தாண்டு முழுவதும், வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்தாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் விளையாட உள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே தென்னாப்பிரிக்கத் தொடர் அமைந்திருந்தது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும், இரு அணிகளிலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். பேட்டிங்கில் தான் மிகப் பெரிய சொதப்பல். அதிலும் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பும் அளவுக்கு வீரர்கள் உள்ள நிலையில், சரியான வீரரைத் தேர்வு செய்யாதது, சரியான இடத்தில் களமிறக்காதது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

பேட்டிங்கில் சொதப்பல்

பேட்டிங்கில் சொதப்பல்

இந்திய அணஇ இந்தாண்டு முழுவதும், வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்தாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் விளையாட உள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே தென்னாப்பிரிக்கத் தொடர் அமைந்திருந்தது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும், இரு அணிகளிலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். பேட்டிங்கில் தான் மிகப் பெரிய சொதப்பல். அதிலும் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பும் அளவுக்கு வீரர்கள் உள்ள நிலையில், சரியான வீரரைத் தேர்வு செய்யாதது, சரியான இடத்தில் களமிறக்காதது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

பாடம் கற்பாரா கோஹ்லி

பாடம் கற்பாரா கோஹ்லி

தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்த நிலையில், மிகப் பெரிய தோல்வி, கேப்டன் விராட் கோஹ்லிக்கு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும். அதுவும் புது மாப்பிள்ளையான அவர் இந்தத் தோல்வியை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், இந்தத் தோல்வியும் ஒருவிதத்தில் நல்லதுதான். அடுத்தப் போட்டிகளுக்கு சிறப்பாக தயாராக வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தந்த நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணியைத் தேர்வு செய்வதுடன், அதற்கேற்ப வீரர்களை மனதளவிலும், பயிற்சியிலும் மேம்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

3வது டெஸ்ட்டில் சோதனை

3வது டெஸ்ட்டில் சோதனை

ஜோக்கனஸ்பர்கில், 24ம் தேதி துவங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணிக்கு வைக்கப்பட்டுள்ள டெஸ்ட் ஆகும். ஒயிட்வாஷ் ஆகாமல், தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம் என்பதை காட்டுவதற்கு கோஹ்லி அண்ட் கோவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Thursday, January 18, 2018, 13:53 [IST]
Other articles published on Jan 18, 2018
English summary
India losses winning record in SA tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X